“உலக கோப்பை பைனல்ல இந்த ரெண்டு டீம்தான் இருக்கும்.. ஆனா இந்தியா..!” – மிஸ்பா அதிரடியான தேர்வு!

0
29108
Misbah

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நாளை இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி உடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது.

இதற்கு அடுத்து முதல் அரை இறுதியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இரண்டாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு வந்திருக்கும் அனைத்து அணிகளையும் இந்திய அணி லீக் சுற்றில் வென்று இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வென்று இருக்கிறது. ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணியை வென்று இருக்கிறது. அரை இறுதி அணிகளை வெல்லாத அணியாக நியூசிலாந்து இருக்கிறது.

இதில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் இந்திய அணிக்கு பேட்டிங் வரிசை ஏழு வரை இருந்தாலும் பேட்ஸ்மேன் உலகத்தரமானவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் பந்து வீச்சுக்கு ஐந்தே பவுலர்கள் இருந்தாலும், அவர்களும் உலகத் தரமானவர்களாக இருக்கிறார்கள்.

இதன் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்களால் 50 ஓவர்களை முழுமையாக விளையாட முடிகிறது. அதே சமயத்தில் எதிரணிகளை 50 ஓவர்கள் விளையாட விடாமல் இந்திய பந்துவீச்சாளர்களால் ஆல் அவுட் செய்ய முடிகிறது.

- Advertisement -

எனவே நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பலம் மற்ற அணிகளை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. எனவே இந்திய அணி மீதான பார்வைதான் நாக் அவுட் சுற்றில் பொதுவான ரசிகர்களுக்கும் இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் என்று ஒரு தொலைக்காட்சி கிரிக்கெட் விவாதத்தில் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மிஸ்பா உல் ஹக் கூறும் பொழுது ” இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்.

அரையிறுதியில் மோதிக் கொள்ளும் நான்கு அணிகளும் பலமானவைதான். அவர்களுடைய நாளில் யாரையும் அவர்கள் வீழ்த்தக் கூடியவர்கள்தான். ஆனால் இந்த நான்கு அணிகளில் இந்தியாதான் வலிமையானதாக இருக்கிறது. அவர்கள் பேட்டிங் பௌலிங் என சமநிலை கொண்ட அணியாக இருக்கிறார்கள்!” எனக் கூறியிருக்கிறார்!