நாளை தொடங்கும் உலக கோப்பை பயிற்சி போட்டிகள்.. இந்தியா யாருடன் எப்போது மோதல்?.. முழு விபரம்!

0
2842
ICT

இந்தியாவில் நடக்க இருக்கும் 13ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, குஜராத் அகமதாபாத் மைதானத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்க இருக்கிறது!

அதே சமயத்தில் உலக கோப்பையில் கலந்து கொள்ளும் 10 அணிகளுக்கும் தலா இரண்டு பயிற்சி போட்டிகளை ஐசிசி ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த வகையில் தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியாவுக்கும் பயிற்சி போட்டிகள் உண்டு.

- Advertisement -

உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவைப்படும் காம்பினேஷன்களை கண்டறியவும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பின்தங்கியுள்ள வீரர்களுக்கு வாய்ப்பை கொடுக்கவும், மேலும் சூழ்நிலைகளுக்கு பழகவும், பயிற்சி போட்டிகள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இந்த வகையில் அனைத்து அணிகளுமே தங்களது முதல் பயிற்சி போட்டியில் விளையாடும் இடங்களை சென்று அடைந்திருக்கின்றன. இந்த வகையில் இந்திய அணியும் தாங்கள் அடுத்து விளையாடும் அசாம் கவுகாத்திக்கு சென்றுவிட்டது.

பாகிஸ்தான் அணி தன்னுடைய முதல் பயிற்சி போட்டியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் விளையாடுகிறது. நேராக பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட அணி, ஹைதராபாத் வந்து தன்னுடைய பயிற்சியையும் ஆரம்பித்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் எந்தெந்த அணிகள்? யார் யார்? உடன் பயிற்சி போட்டிகளில் எந்த இடங்களில் மோதுகிறது? எந்த தேதிகளில் விளையாடுகிறது? என்கின்ற முழு விபரத்தையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

செப்டம்பர் 29:
பங்களாதேஷ் – இலங்கை கவுகாத்தி
தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் திருவனந்தபுரம்
நியூசிலாந்து – பாகிஸ்தான் ஹைதராபாத்

செப்டம்பர் 30:
இந்தியா – இங்கிலாந்து கவுகாத்தி
ஆஸ்திரேலியா – நெதர்லாந்து திருவனந்தபுரம்

அக்டோபர் 2:
இங்கிலாந்து – பங்களாதேஷ் கவுகாத்தி
நியூசிலாந்து – சவுத் ஆப்பிரிக்கா திருவனந்தபுரம்

அக்டோபர் 3:
ஆப்கானிஸ்தான் – இலங்கை கவுகாத்தி
இந்தியா – நெதர்லாந்து திருவனந்தபுரம்
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ஹைதராபாத்