“உலக கோப்பை பைனல் மாதிரியே ஆகப்போகுது.. தயவுசெய்து திருந்துங்க” – இந்திய முன்னாள் வீரர் கோபம்

0
54
ICT

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி நாளை விளையாட ஆரம்பிக்கிறது. இந்த தொடரை சுற்றி நிறைய முன்னாள் வீரர்களின் கருத்துக்கள் குவிந்து கிடக்கிறது.

குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த முறை வித்தியாசமாக இந்திய ஆடுகளங்களை பற்றி அவர்கள் எந்த வித தவறான பேச்சையும் எடுக்கவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இந்தியாவுக்கு எதிராக அமையும் என்பதாக பேசி வருகிறார்கள். அப்படியான ஆடுகளங்கள் அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவரும் எனக் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்களின் இதே கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் கூறி இருக்கிறார். மேலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அமைக்கப்பட்ட சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம்தான் இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “போட்டி குறித்து சில பெரிய விஷயங்கள் இருக்கிறது. அதில் முதல் நாளில் இருந்தே பந்து திரும்பும் அளவுக்கான சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பது பற்றியது. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன் அப்படியான ஆடுகளங்கள் கூடாது. தங்களுக்கு சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று இப்படி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அமைத்ததால்தான் தோல்வி அடைந்தோம்.

- Advertisement -

ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் என்று நீங்கள் சொல்லலாம். இது வடிவம் சம்பந்தப்பட்டது கிடையாது பழக்கம் சம்பந்தப்பட்டது. நீங்கள் இதற்கு பழகி இப்படியே மாறி விடுவீர்கள். நீங்கள் ஆடுகளத்தை அமைப்பவரிடம் போட்டிக்கு முடிவு தெரியும்படி ஆடுகளத்தை அமைக்கச் சொல்லுங்கள். மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சாலை போலத்தான் ஆடுகளம் இருக்கக் கூடாது.

இதையும் படிங்க : “இங்கிலாந்து பாஸ்பால் விளையாடினா நல்லது.. 2நாள்ல மேட்ச்ச முடிச்சிட்டு போயிடுவோம்” – சிராஜ் அதிரடி பேச்சு

இங்கிலாந்து அணியிடம் பெரிய சுழல் பந்துவீச்சு தாக்குதல் கிடையாது. எனவே சராசரியான ஆடுகளங்கள் அமைக்கும் பொழுது இந்த தொடரில் இந்திய அணி மூன்று முறையாவது 500 ரன்கள் தாண்டி அடிக்கும். மேலும் இந்த தொடரையும் பெரிய அளவில் இந்திய அணியே வெல்லும்” எனக் கூறியிருக்கிறார்.