பெண்கள் ஐபிஎல் ஏலத்தில் அடித்து தூக்கிய பெங்களூரு; விபரம் உள்ளே!

0
1418
WPL

உலகின் நம்பர் ஒன் பிரான்சிஸைஸ் டி20 லீக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் 2008 முதல் நடத்தி வரும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. இந்த வருடத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பிற்கான உரிமத் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய விலைக்கு விற்று சாதனை படைத்தது!

இதை எடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை ஆண்கள் கிரிக்கெட்டில் இருந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கும் விரிவு செய்து உள்ளது. இதன் மூலம் இந்திய பெண்கள் கிரிக்கெட் தாண்டி உலகளாவிய பெண்கள் கிரிக்கெட்டிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது!

- Advertisement -

முதல் பெண்கள் ஐபிஎல்கான தொடருக்கு மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜெயன்ட்ஸ், உத்தரப்பிரதேச வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் என ஐந்து அணிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது.

இந்தத் தொடருக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் 12 கோடி செலவு செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அணியிலும் 15 முதல் 18 வீராங்கனைகள் இருக்க வேண்டும். மேலும் ஒரு அணியில் ஐந்து வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடும் அணியில் இடம் பெறலாம். அதில் ஒருவர் அசோசியேட் கிரிக்கெட் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு இருக்கிறது.

இன்றைய ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு தனித்திட்டத்துடன் வந்து மிக அபாரமாக செயல்பட்டு ஐந்து வீராங்கனைகளை வாங்கியதன் மூலமே கோப்பையை கைப்பற்றும் என்கின்ற அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை மொத்த பணத்தில் ஏறக்குறைய 27 சதவீதம் அதாவது 3.40 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. இவரை வாங்க மும்பை அணி உடன் கடும் போட்டி இருந்த போது பெங்களூர் அணி விடாமல் துரத்தி வாங்கி விட்டது.

இதற்கு அடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு நியூசிலாந்து நாட்டின் நட்சத்திர மிதவேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சோபி டிவைனை வாங்கி அசத்தியது. இதற்கடுத்து இன்னொரு உச்சகட்டமாக ஆஸ்திரேலியா அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் எலைஸ் பெரியை 1.70 கோடிக்கு வாங்கி அசத்தியது.

மேலும் இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ரேணுகா சிங்கை 1.50 கோடிக்கு வாங்கியது. மேலும் மிகச் சிறப்பாக தல தோனியின் மிகப்பெரிய ரசிகையான பெண்கள் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷர் ரிக்சா கோஸை 1.90 கோடிக்கு வாங்கி தற்போது மிகப்பெரிய பலத்துடன் பெங்களூர் நிற்கிறது!