தென் ஆப்பிரிக்கா டி20.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 2 முக்கிய மாற்றம்.. அதிரடி அணி களம் இறங்குகிறது

0
275
WI

தற்போது தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என தென் ஆப்பிரிக்கா வெல்ல, தற்போது டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-0 எனக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23, 25 மற்றும் 27 ஆம் தேதிகளில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து கொண்டே இருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரோமன் பவல் தொடர்ந்து கேப்டனாக இருக்கிறார். ரோஸ்டன் சேஸ் துணை கேப்டனாக தொடர்கிறார். மேலும் சிம்ரன் ஹெட்மையர் டி20 அணிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

இந்த அணியில் மீண்டும் அனுபவ மூத்த வீரர்கள் ஆண்ட்ரூ ரசல் மற்றும் ஜேசன் ஹோல்டருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. மேலும் சொந்த நாட்டில் நடைபெற்ற டி20 தொடரில் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் இழந்திருந்தது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து டி20 கிரிக்கெட் சிறப்பாக விளையாடி முன்னேறுவதின் மூலம் அணிக்கான புதிய ஸ்பான்சர்களை கொண்டு வர விரும்புகிறது.இதன் காரணமாக இந்தத் தொடரில் எல்லா முன்னணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 1 ரன் 3 விக்கெட்.. பைனலில் சொதப்பிய பொல்லார்ட்.. ஆர்சிபி வில்ஜாக்ஸின் ஓவல் அணி சாம்பியன்.. ஹண்ட்ரட் 2024

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:

ரோவ்மன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், ஜான்சன் சார்லஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரோன் ஹெட்மியர், ஃபேபியன் ஆலன், ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், ஷமர் ஜோசப், ஓபேட் மெக்காய், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஷெர்ஃபேன் ரூதர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.

- Advertisement -