இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 100 பந்துகள் கொண்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்விசிபிள் அணியும், வின்ஸ் தலைமையிலான சவுத்தன் பிரேவ் அணியும் எதிர்கொண்டன.
இதில் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஓவல் இன்விசிபில் அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையும் கைப்பற்றியது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சவுத்தர்ன் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வில் ஜாக்ஸ் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். 22 பந்துகள் எதிர் கொண்ட நிலையில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் என 37 ரன்கள் விளாசினார். மலான் ஏழு ரன்களில் வெளியேற, மூன்றாவது வரிசையில் களமிறங்கிய சாம் கரண் 25 ரன்கள், ஜோர்டன் 25 ரன்களும் குவித்தனர்.
பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டாம் கரண் 11 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 24 ரன்கள் குவித்தார். இதனால் ஓவல் அணி 100 பந்துகள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சவுத்தர்ன் பிரேவ் அணி களமிறங்கியது. இந்த அணியில் அலெக்ஸ் டேவிஸ் மற்றும் வின்ஸ் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ப்லூய் மட்டும் 14 பந்துகளில் 20 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு சவுத்தர்ன் அணிக்கு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. குறிப்பாக மஹ்மூத்தின் பங்குவீச்சில் ஆட்டத்தின் 72 வது பந்தில் இருந்து 78வது பந்து வரை ஏழு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட் விழுந்தது ஆட்டத்தின் திருப்பு முறையாக அமைந்தது. இறுதிக்கட்டத்தில் ஓவர்டன் 11 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களோடு 22 ரன்கள் குவித்தார். இருப்பினும் இறுதியில் 100 பந்துகளில் ஏழு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டும் குவித்ததால் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஓவல் அணி வெற்றி பெற்றது.
ஓவல் அணியில் பந்துவீச்சில் மஹ்மூத் 20 பந்துகளில் 12 டாட் பந்துகளோடு 17 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தினார். அதற்குப் பிறகு ஆடம் ஜம்பா 20 பந்துகளில் ஏழு டாட் பந்துகளோடு 26 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையும் படிங்க:விராட் கோலிகிட்ட இருந்து இந்த விஷயத்தை கத்துகிறேன்.. அவர் பக்கத்தில் இருந்தால் நீங்கள் இதை உணர்வீர்கள் – துருவ் ஜூரேல் பேட்டி
இதனால் 17 இரண்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓவல் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மஹ்மூத் ஆட்டநாயகன் விருதையும் ஷாம் கரண் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்கள்.
Saqib Mahmood, playing his first competition since 2021, took 3 wickets in 7 balls to change the course of #TheHundred Final! 🏆 pic.twitter.com/9OeX29xfZJ
— The Hundred (@thehundred) August 18, 2024