இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ரோமன் பவல் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அணி வெள்ளை பத்து தொடர்களில் பங்கேற்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்று இருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது.
மூன்று அதிரடி வீரர்கள் வருகை
இலங்கை அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரில் கலந்து கொள்ள முடியாமல் இருந்த நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல் மற்றும் சிம்ரன் ஹெட் மையர் என மூன்று அதிரடி வீரர்களும் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இந்த அணிக்கு தொடர்ந்து கேப்டனாக ரோமன் பவல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சொந்த கேப்டன் உடன் சண்டையிட்ட அல்ஜாரி ஜோசப் தண்டனையின் காரணமாக நீக்கப்பட்டிருக்கிறார். அவருடைய இடத்திற்கு வேகப்பந்துவீச்சாளர் போர்டு நியமிக்கப்பட்டிருக்கிறார். சுழல் பந்துவீச்சாளர்களாக அகேல் ஹுசைன் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் இருக்கிறார்கள்.
கோச் டேரன் சமி மகிழ்ச்சி
இந்த அணி அறிவிப்பு குறித்து பேசி இருக்கும் பயிற்சி யாளர் டேரன் சமி “அனுபவம் வாய்ந்த இந்த டி20 அணி மிகவும் செட்டில் செய்யப்பட்ட அணியாகும். இருந்த பிளேயிங் லெவனில் இடம் பெறுவது ஒவ்வொரு வீரருக்கும் சவால் ஆகும். எனவே விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சிரமமான காரியம். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணி தொடர்ந்து தனது பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடும். அது எங்களை கேவல்களை வெல்லவும், இந்த போட்டி தொடரை வெல்லவும் அனுமதிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : சஞ்சு சம்சனுக்காக இறங்கிய கேப்டன் சூர்யா.. சமாதானம் செய்த நடுவர்கள்.. களத்தில் என்ன நடந்தது.?
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி : ரோமன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரோன் ஹெட்மியர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஷெர்ஃபேன் ருதர்ஃபர்ட்.






