இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்கோ ஜான்சன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் முதல் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் உதவியோடு 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 50 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் ஏழு பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் என 107 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது.
இதில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் குவித்தது. இந்த போட்டியின் நடுவே 15வது ஓவரில் இரண்டாவது பந்தின் நடுவே சாம்சன் மற்றும் மார்க்கோ ஜான்சன் ஆகியோர் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. ரவி பிஸ்னோய் வீசிய ஒரு புல்லர் லென்த் டெலிவரியை ஜெரால்டு கோட்சி அடித்து விட்டு சிங்கிள் ஓடிய போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் பந்து நேராக புல்டாசாக வீசப்பட்டது.
சூரியகுமார் யாதவ் ஜான்சன் இடையே வாக்குவாதம்
அதை கவனித்த மார்க்கோ ஜான்சன் பந்தை பிடிக்க விடாமல் இடையூறு செய்ததாக தெரிகிறது. இதனால் சற்று கோவம் அடைந்த சாம்சன் ஜான்சன் மற்றும் கோட்சேவிடம் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட, உடனடியாக கேப்டன் சூரியகுமார் யாதவ் சாம்சனை பாதுகாத்து உடனடியாக விவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக கள நடுவர்கள் இதில் தலையிட்டு இரண்டு அணி வீரர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களின் இந்த செயலால் கேப்டன் சூரியகுமார் யாதவ் மகிழ்ச்சியில் இல்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) November 8, 2024
இதையும் படிங்க:சாம்சன் முடிவு பண்ணிட்டா அவரை தடுக்க முடியாது.. ஒரு விஷயம் தோத்தாலும் பெருமைதான் – எய்டன் மார்க்ரம் கருத்து
இருப்பினும் இந்திய அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ள நிலையில் இரண்டாவது டி20 போட்டி நாளை இரவு 07.30 மணிக்கு நடைபெற உள்ளது. தொடரில் முன்னிலை பெற வேண்டுமானால் தென்னாபிரிக்க அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். எனவே இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுமா? அல்லது தென்னாபிரிக்கா தனது முதல் போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.