இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போகும் அணி இதுதான் – எச்சரித்த கவுதம் கம்பீர்!

0
1593

இந்திய அணிக்கு இவர்கள்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கணித்துள்ளார் கௌதம் கம்பீர்.

உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக குவாலிபயர் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக 22 ஆம் தேதி முதன்மை சுற்று துவங்கும்.

- Advertisement -

இந்திய அணி குரூப் இரண்டில் இருக்கிறது. அத்துடன் பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கின்றன. மேலும் இரண்டு அணிகள் குவாலிஃபயர் சுற்றில் இருந்து தகுதி பெற்று குரூப் இரண்டில் இடம் பெறும்.

இன்று துவங்கிய குவாலிபயர் சுற்றின் முதல் போட்டியில் நமீபியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பையை வென்ற நம்பிக்கையில் இலங்கை அணி களம் இறங்குகிறது. மேலும் குவாலிஃபயர் சுற்றில் இருந்து தகுதி பெற்று மெயின் சுற்றுக்கு செல்லும் அணிகளில் ஒன்றாக இலங்கை அணியும் இருக்கிறது.

இந்நிலையில் இலங்கை அணி ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் தோல்விக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்து, கோப்பையை வென்றது. அந்த அளவிற்கு இலங்கை அணி வளர்ந்து இருப்பதை கண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி இந்தியாவிற்கு அறிவுரை கூறியுள்ளார் கௌதம் கம்பீர்.

- Advertisement -

கௌதம் கம்பீர் கூறுகையில், “சமீப காலமாக இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை போன்ற தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கும். சமீரா மற்றும் லஹிரு குமரா இருவரும் அணிக்குள் வந்த பிறகு கிட்டத்தட்ட பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டையும் கவர் செய்கிறார்கள். அவர்களை குறைத்து எடை போட முடியாது. இந்தியாவிற்கு மட்டுமல்லாது மற்ற அணிகளுக்கும் இவர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள். உலககோப்பையில் கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளனர். இந்தியாவிற்கு இதை நான் எச்சரிக்கையாக கூறுகிறேன். அவர்களை குறைத்து எடை போட்டு விட வேண்டாம்.” என்றார்.