சுப்மன் கில் வாய்ப்பே இல்லை.. சென்னையில் சிஎஸ்கே அணியை அடிக்க குஜராத் அணிக்கு இவர்தான் துருப்புச்சீட்டு – அடித்துச்சொல்லும் சேவாக்!

0
2197

சென்னையில் சிஎஸ்கே அணியை வீழ்த்துவதற்கு குஜராத் அணிக்கு துருப்புச் சீட்டாக இருக்கப்போவது இந்த வீரர் தான் என்று தனது கணிப்பை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்.

இந்த வருட ஐபிஎல் சீசன் கடைசி நாள், கடைசி போட்டி, கடைசி ஓவர் வரை சென்று பரபரப்பாக முடிந்திருக்கிறது. இறுதியாக புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளும், அடுத்த இரண்டு இடங்களில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

- Advertisement -

முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் மற்றும் சிஎஸ்கே அணி முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அடுத்ததாக எலிமினேட்டர் போட்டி லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

முதலாவதாக நடைபெறும் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான குவாலிபயர் போட்டியில், எந்த அணி வெற்றி பெறும்? யார் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்து பல்வேறு கணிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக் தனது கணிப்பை தெரிவித்து, யார் சிறப்பாக செயல்படுவார்? யார் துருப்புச்சீட்டாக இருப்பார்? என்பது குறித்து பேசினார்.

சேவாக் பேசியதாவது: “சிஎஸ்கே அணி பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைப்பது தான் கடும் சவாலாக குஜராத் அணிக்கு இருக்கும். இந்த நேரத்தில் ரஷித் கான் பயன்படுத்தப்பட வேண்டும். பார்ட்னர்ஷிப்பை உடைப்பதில் இவரும் கைதேர்ந்தவர். இந்த சீசன் முழுவதும் ரஷித் கான் பயன்படுத்தப்பட்ட விதம் சிறப்பாக இருந்திருக்கிறது. ஹார்திக் பாண்டியா நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

- Advertisement -

மேலும் சமி பவர்-பிளே ஓவர்களில் செயல்பட்ட விதம் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலையும் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் இவர்கள் இருவரையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எப்படி செயல்படுவார் என்பதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். ரஷித் கான் தான் துருப்புச் சீட்டாக இருப்பார.” என்றார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பவர்பிளே ஓவர்களில் முகமது சமி மற்றும் மிடில் ஓவர்களில் ரஷித் கான். இருவரும் பந்துவீச்சில் இன்றியமையாத பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். இருவரும் தலா 24 விக்கெடுகள் வீழ்த்தி பர்பில் தொப்பியை தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வருவதற்கு இவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.