207 ரன்.. கம்மின்ஸ் அணியை புரட்டி எடுத்த ஸ்மித்.. பாண்டிங்கின் வாஷிங்டன் சாம்பியன்.. எம்எல்சி 2024

0
157
Smith

அமெரிக்காவில் நடைபெற்று வந்த இரண்டாவது எம்எல்சி டி20 லீக் தொடரின் இறுதி போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதிக்கொண்டன. இதில் வாஷிங்டன் பிரீடம் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்று இந்த வருடம் சாம்பியன் ஆனது.

கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் பிரான்சிஸ்கோ அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வாஷிங்டன் பிரீடம் அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 6 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வந்த ஆண்ட்ரீஸ் கவுஸ் 14 பந்துக்கு 21 ரன்கள், ரச்சின் ரவீந்தரா 9 பந்துக்கு 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 52 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். கடைசிக் கட்டத்தில் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக 22 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் பிரீடம் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. பாட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து மெகா இலக்கை நோக்கி விளையாடிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு பத்தாவது இடத்தில் வந்த கார்மி லி ரூக்ஸ் 19 பந்தில் 20 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ரன்னாக அந்த அணிக்கு அமைந்தது. இதற்கு அடுத்து விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஷ் 18 ரன்கள் எடுத்தார். பின் ஆலன், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஹசான் கான் தலா 13 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி பதினாறு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேக்ஸ்வெல் மற்றும் மார்க்கோ யான்சன் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். வாஷிங்டன் பிரீடம் அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது எம்எல்சி டி20 லீக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 3வது டி20.. நாளை உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. கம்பீர் மாற்றத்திற்கு விரும்புவாரா.. யாருக்கு வாய்ப்பு?

முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசன் முழுக்கவே வாஷிங்டன் பிரீடம் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்கள். மேலும் இன்னொரு ஆஸ்திரேலியா வீரரான மேக்ஸ்வெல் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்து வீச்சிலும் அசத்தி வந்தார். எனவே எதிர்பார்த்தபடியே இந்த அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது!

- Advertisement -