இலங்கை சென்றுள்ள இந்திய அணி சூரியகுமார் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. நாளை மூன்றாவது போட்டியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மாற்றங்களை ஏற்படுத்துவாரா? என்று பார்க்கலாம்.
நேற்று இரண்டாவது போட்டியில் முதுகுப்பிடிப்பின் காரணமாக துணை கேப்டன் சுப்மன் கில் விளையாடவில்லை. அவருடைய இடத்தில் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கோல்டன் டக் ஆனார். எதிர்காலத்தை பார்க்கின்ற காரணத்தினால் சுப்மன் கில் முதுகுப் பிடிப்பு சரியானால் தொடக்க வீரராக வருவார். ஆனால் ரிஷப் பண்ட் விளையாடும் இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்புகள் உண்டு.
இந்த முறை டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என இரண்டிலும் வாய்ப்பு பெற்று இருக்கும் ரியான் பராக் முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பை பெறவில்லை. மேலும் அவருடைய சுழல் பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கிறது. எனவே வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்க மாட்டார்கள் என்று தெரிகிறது.
இதேபோல ரிங்கு சிங்குக்கும் விளையாடுவதற்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே சிவம் துபே ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்று இருக்கின்ற காரணத்தினால் ரிங்கு சிங் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அர்ஸ்தீப் சிங் இடத்தில் அவரைப் போலான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இடம்பெறலாம். கம்பீரை பொறுத்தவரை மொத்தமாக தொடரை வென்று முடிக்கவே விரும்புவார். ஏனென்றால் பெரிய அளவில் பரிசோதிக்க வேண்டிய வீரர்கள் யாரும் அணியில் இல்லை. முடிந்த வரையில் சரியான வீரர்களை எடுத்து தொடரை முழுதாக வெல்லும் மனநிலை கொண்டவராகவே கம்பீர் இருப்பார்.
இதையும் படிங்க : அஸ்வினுக்கே மன்கட்.. பயத்தை காட்டிய வீரர்.. அல்டிமேட் ரியாக்சன்.. டிஎன்பிஎல் 2024ல் ருசிகரம்
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :
சுக்குமன் கில், ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னாய், முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமது.