உலக கிரிக்கெட்

உண்மைதான்.. எங்க வீரர்கள் இதுக்கு தகுதி இல்லாம இருக்காங்க – பாக் துணை கேப்டன் சவுத் ஷகீல் ஒப்புதல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் இளம் வீரர் சவுத் ஷகீல் ஒரு முக்கிய விஷயத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 அணிகளுக்கு தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டின், மேலும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி என இரண்டு புதிய தலைமை பயிற்சியாளர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது அணியில் பயிற்சியாளர்களின் பேச்சைக் கேட்டு நடக்காவிட்டால் வீரர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அத்தோடு நிறைய அதிகாரம் பயிற்சியாளர்களின் பக்கம் மாற்றப்பட்டு இருக்கிறது.

பாபர் அசாமை மீண்டும் வெள்ளைப்பந்து அணிகளுக்கு கேப்டனாக கொண்டு வந்தார்கள். எனவே பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அவரை கேப்டனாக மீண்டும் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் ஷான் மசூத்தை தொடர்ந்து கேப்டனாக இருக்க விட்டு, புதிய துணை கேப்டனாக இளம் இடதுகை பேட்ஸ்மேன் சவுத் ஷகீலை கொண்டு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக பேசியிருக்கும் சவுத் ஷகீல் “உண்மையைச் சொல்வது என்றால் கடந்த இரண்டு மாதங்களில் எங்களுடைய வீரர்களில் சிலருக்கு உடல் தகுதி நிறைய குறைந்துவிட்டது. அவர்களுமே இதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.தற்போது நாங்கள் உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும் எதிர்காலத்தில் நாங்கள் உடல் தகுதியில் மிகச் சிறப்பாக வருவோம்.

இதையும் படிங்க : பெரிய 6.. அப்பாவை மிஞ்சிய சமித் டிராவிட்.. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு ரெடி.. கண் வைக்கும் அணிகள்

நான் எப்பொழுதும் கேப்டன் பொறுப்பை அனுபவித்து செய்திருக்கிறேன். தற்பொழுது பாகிஸ்தான் தேசிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. நான் ரன்கள் அடித்தாலும் அது அணியில் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று நினைக்கக் கூடியவன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by