தற்போது கர்நாடகாவில் அந்த மாநில கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் டி20 லீக் மகாராஜா டிராபி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த தொடரில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் அவருடைய திறமை சிறந்த முறையில் வெளிப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மகாராஜா டி20 லீக் தொடர்பான ஏலத்தில் மைசூர் வாரியர்ஸ் அணி லெஜெண்ட் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட்டை சில லட்ச ரூபாயில் வாங்கியது. அப்போது இருந்தே அவருடைய விளையாட்டு எப்படி இருக்கும்? என்பதை பார்க்க நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடு இருக்கும் சமித் டிராவிட் இன்னும் இரண்டு இலக்க ரன்னை தொடவில்லை. இரண்டு போட்டிகளிலுமே தலா ஏழு ரன்கள் என 14 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். முதல் போட்டியில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டாவது போட்டியில் அருமையான ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்.
நேற்று பெங்களூர் பிளாஸ்டர் அணிக்கு எதிரான போட்டியில் களத்தில் உள்ளே வந்ததும் கொஞ்சம் ஷார்ட்டாக வீசப்பட்ட பந்தை, எந்தவித அச்சமும் இல்லாமல் உடனடியாக லென்த்தை பிக்கப் செய்து மிட் விக்கெட் திசையில் அற்புதமாக சிக்ஸர் அடித்தார். லென்த்தை உடனடியாக கணித்த விதம், மற்றும் அணிக்காக பயமில்லாமல் பெரிய ஷாட்டுக்கு உடனே சென்றது என அவருடைய அணுகுமுறை சிறப்பாக இருந்தது.
மேலும் சமித் டிராவிட் மிடில் வரிசை பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல், மிதவேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராகவும் இருக்கிறார். இப்படியான ஆல் ரவுண்டர்களுக்கு இந்திய கிரிக்கெட்டில் அதிக தேவை இருக்கின்ற காரணத்தினால் தன் மகனை சரியான முறையில் ராகுல் டிராவிட் உருவாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க : வெறும் 9 விக்கெட்.. பும்ரா அஸ்வின் சாதனை பட்டியலில் .. முதல் பாக் வீரராக இணைய ஷாகின் அப்ரிடிக்கு பெரிய வாய்ப்பு
எனவே இந்த காரணத்தினால் வருகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சில அணிகள் சமித் டிராவிட்டை வாங்க முயற்சி செய்யலாம். குறிப்பாக மும்பை அணி சச்சின் டெண்டுல்கரின் பிரபல்யத்தை பயன்படுத்திக் கொள்ள அவரது மகனை வாங்கி அணியில் வைத்திருக்கிறது. அதுபோல பெங்களூரை சேர்ந்த ராகுல் டிராவிட்டின் பிரபல்யத்தை பயன்படுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சமித் டிராவிட்டை வாங்கி வணிகரீதியாகவும் முயற்சி செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அடிப்படை விலையில் வாங்குவதற்கு தனிப்பட்ட முறையில் தகுதி உள்ள வீரராகவே சமித் டிராவிட் இருக்கிறார்!
ದ್ರಾವಿಡ್ ಸರ್ ಮಗ ಗುರು ಇವ್ರು..🤯🔥
— Star Sports Kannada (@StarSportsKan) August 16, 2024
ಈ ಸಿಕ್ಸ್ ಗೆ ಒಂದು ಚಪ್ಪಾಳೆ ಬರ್ಲೇಬೇಕು..👏👌
📺 ನೋಡಿರಿ Maharaja Trophy KSCA T20 | ಬೆಂಗಳೂರು vs ಮೈಸೂರು | LIVE NOW #StarSportsKannada ದಲ್ಲಿ#MaharajaTrophyOnStar@maharaja_t20 pic.twitter.com/ROsXMQhtwO