ஹர்சல் படேலை பந்து வீச விடாமல் தடுத்த நடுவர்கள்; நான்கு பந்துகளை வீசிய மேக்ஸ்வெல் ; காரணம் என்ன?

0
1114
Harshal

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தற்பொழுது மோதி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ரகானே வந்து கான்வே உடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தில் இருவரும் ஈடுபட்டார்கள். இந்த ஜோடி 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரகானே 20 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கான்வே உடன் சிவம் துபே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிக அதிரடியாக விளையாடி 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கான்வே 45 பந்தில் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய சிவம் துபே 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அம்பதி ராயுடு 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். சென்னை அணி மிகவும் வலுவான நிலையில் பேட்டிங்கில் இருந்தது.

இந்த நிலையில் இருபதாவது ஓவரை ஹர்சல் படேல் வீச வந்தார். அந்த ஓவரில் மொயின் அலிக்கு வீசிய இரண்டாவது பந்தை அவரது இடுப்பின் உயரத்திற்கு மேல் ஃபுல் டாஸ் ஆக வீசி நோபால் வாங்கினார். பின்பு அதற்கு வழங்கப்பட்ட பிரீ ஹிட்டில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். இதற்கு அடுத்து ஓவரின் மூன்றாவது பந்தை மொயின் அலிக்கு மீண்டும் இடுப்புக்கு மேல் புல் டாஸ் ஆக ஹர்சல் படேல் வீசி நோபல் வாங்கினார்.

- Advertisement -

இதற்குப் பின்பு நடுவர்கள் மீதி நான்கு பந்துகளையும் ஹர்சல் படேலை வீச விடவில்லை. காரணம் ஒரு பந்துவீச்சாளர் ஒரு முறைக்கு மேல் பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் புல்டாஸ் ஆக பந்தை வீசினால், அவரால் அந்த ஆட்டத்தில் அதற்கு மேல் பந்து வீச முடியாது. எனவே இந்த கிரிக்கெட் விதியால் ஹர்சல் படேலை தொடர்ந்து பந்து வீச நடுவர்கள் அனுமதிக்கவில்லை.

இதற்கு அடுத்து எஞ்சிய நான்கு பந்துகளையும் மேக்ஸ்வெல் வீசினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு இக்கட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆட்டம் இழக்காமல் மொயின் அலி 14 ரன்கள், மகேந்திர சிங் தோனி ஒரு ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்கள். முகமது சிராஜ் நான்கு ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்!