இந்திய அணியில் உள்ள பெரிய பெயர்களை பார்த்து தங்களது அணி வீரர்கள் வியந்து விளையாட்டை மறந்து விட்டார்கள் என யுஏஇ அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கூறியிருக்கிறார்.
நேற்று இந்திய அணி யுஏஇ அணியை வெறும் 57 ரன்னுக்கு சுருட்டியது. மேலும் இலக்கை துரத்திய பொழுது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 4.3 ஓவரில் வெற்றி பெற்றது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி மிகக் குறைந்த ஓவர்களில் முடித்த போட்டியாக இது அமைந்தது.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக யுஏஇ அணி கடுமையாக போராடி இருந்தது. இந்திய அணிக்கு எதிராகவும் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மிக மோசமாக விளையாடி ரசிகர்களை ஏமாற்றி விட்டது.
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் பேசும் பொழுது ” இது உண்மைகள் பேட்டிங் செய்வதற்கு கடினமான சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான விக்கெட் கிடையாது. இங்கு நல்ல முறையில் பேட்டிங் செய்ய முடியும். ஆனால் குல்தீப் போன்ற மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களால் எந்த ஆண்டுகளத்திலும் பந்தை நன்றாக திருப்ப முடியும். இவ்வளவு தரமான அணிக்கு எதிராக விளையாடுவது இதுவே முதல் முறை. இந்திய அணியில் உள்ள பெரிய பெயர்களை பார்த்து எங்கள் அணியின் வீரர்கள் வியப்படைந்து விட்டார்கள். நாங்கள் 20 ஓவர் பேட் செய்திருக்க வேண்டும்”
“மேலும் உலக சாம்பியன்கள் எப்பொழுதும் எதிரணிகளை நசுக்குவார்கள். எங்களுக்கு பவர் பிளே வரையில் எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால் சுழல் பந்துவீச்சாளர்கள் வந்ததும் எல்லாமே மாறிவிட்டது. ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. ஆனால் குல்தீப் மற்றும் வரும் இருவரும் சிறந்த வீரர்களுக்கு கூட கடினமாக இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : ஆசிய கப்புக்கு 8 டீம் தேவையா?.. லம்போர்கினி கார்ல வந்த கேப்டன் கதை மாதிரி இருக்கு.. ஏற்க முடியாது – அஜய் ஜடேஜா விமர்சனம்
“ஆனால் இது அனைத்துமே பயணத்தின் பகுதியாகும். இது போன்ற தரமான வீரர்களை எங்கள் வீரர்கள் எவ்வளவு எதிர்கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் நம்பிக்கை பெறுவார்கள். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் விளையாடுவது அவர்கள் வளரவே உதவும். இதை அவர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்”