ஆசிய கப்புக்கு 8 டீம் தேவையா?.. லம்போர்கினி கார்ல வந்த கேப்டன் கதை மாதிரி இருக்கு.. ஏற்க முடியாது – அஜய் ஜடேஜா விமர்சனம்

0
103
Jadeja

நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா யுஏஇ அணிகள் மோதி கொண்ட போட்டி மொத்தம் 17 ஓவர்களில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இது குறித்து அஜய் ஜடேஜா முக்கியமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

தற்பொழுது ஆசியக் கோப்பை தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஐந்து அணிகள் விளையாடுகின்றன. இத்துடன் சிறிய மூன்று அணிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் எட்டு அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

எட்டு அணிகள் தேவையா?

இந்த நிலையில் ஆசியக் கோப்பை போன்ற பெரிய தொடரில் சிறிய அணிகளை சேர்த்துக் கொள்வது அவசியமா? என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும், ஆசியக் கோப்பையில் போட்டித்தன்மை இல்லாத ஆட்டங்கள் சுவாரசியமற்றதாக இருப்பதாகவும் அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அஜய் ஜடேஜா பேசும்பொழுது ” எவ்வளவு கண்ணியமாக பேச முயற்சி செய்தாலும் ஆசியக் கோப்பை போன்ற பெரிய தொடரில் எட்டு அணிகளை வைத்து விளையாட வேண்டுமா? என்பதைக் குறித்து பேசியாக வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடர் சிறிய தொடர் கிடையாது. எனவே சிறிய அணிகளை வைத்து விளையாடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்”

- Advertisement -

லம்போர்கினி கார் போல..

“90களில் யுஏஇ அணிக்கு ஒரு கேப்டன் இருந்தார். அவர் பெயர் சுல்தான் ஜராவானி. அவர் தனது அதிவேக காரான லம்போர்கினியில் மைதானத்திற்கு வருவார். நேற்று இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் அவர் வேகமாக வந்து செல்வதைப் போல வேகமாக முடிந்து விட்டது. இந்திய அணிக்கு எதிராக பெரிய அளவில் விளையாட முடியாதுதான். ஆனாலும் யுஏஇ போட்டியை அணுகிய விதம் ஏமாற்றமாக இருக்கிறது”

இதையும் படிங்க : கம்பீர் பண்ற இந்த விஷயம் சரியில்ல.. பெரிய மேட்ச்ல நிச்சயம் அடி வாங்க போறாங்க – அஸ்வின் எச்சரிக்கை

“அந்த அணியில் முதல் மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். அலிசான் சர்பு, கேப்டன் முகமத் வாசிம் மற்றும் ஆசிப் கான் மூவரும் நல்ல முறையில் பேட்டிங் செய்யக்கூடியவர்கள். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் போட்டித் தரம் மற்றும் எட்ஜ் என எதையும் பார்க்க முடியவில்லை. எனவே எட்டு அணிகளை கொண்டு நடத்த வேண்டுமா? என்பது பற்றி யோசிக்க வேண்டும்” என கூறி இருக்கிறார்.

- Advertisement -