பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூரியகுமாருக்கு நடந்த சோகம்.. இவ்வளவுதான் வாழ்க்கை!

0
1303
Surya

இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடக்க இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்திய அரசியல் அணிகள் மோதிக்கொண்ட இறுதிப்போட்டியின் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் மேற்கொண்டு மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் மீண்டும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஒரு பெரிய டி20 தொடர் நடப்பது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது வீரர்களுக்கும் ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் வீரர் லபுசேன் கூறி இருக்கும் பொழுது இது கடினமான ஒன்று, மேலும் புரிந்து கொள்வதற்கும் கடினமானது என்று கூறியிருந்தார்.

மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருந்த தற்போதைய இந்திய கேப்டனான சூரியகுமார் யாதவும் இரண்டு மூன்று நாட்களில் மறக்க கூடிய தோல்வி உலக கோப்பை தோல்வி கிடையாது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இன்று தொடங்க உள்ள இந்த தொடர் குறித்து இந்திய அணியின் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்பதாகவே தெரிகிறது. யாரும் இந்த தொடரை பெரிய அளவில் விரும்பவில்லை.

குறிப்பாக உலகக் கோப்பை தொடரை இழந்து விட்டு இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணியை வெல்வதால் என்ன பயன் என்கின்ற மனநிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக இந்த தொடரில் வீரர்கள் ரன்கள் அடித்தால் அது தங்களை பரவசப்படுத்தாது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு இரண்டே பத்திரிகையாளர் மட்டுமே வந்திருந்தார்கள்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அமைப்பான இந்தியா விளையாடும் பொழுது பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு இரண்டு பத்திரிகையாளர் மட்டும் வருவது என்பது இதுவரை நடக்காத ஒன்று. கடந்த வாரத்தில் இந்திய அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குவிந்து கிடந்த பத்திரிக்கையாளர்கள், ஒரு தோல்விக்கு அடுத்து அப்படியே காணாமல் போய்விட்டார்கள்.

இதை ஒரு சிரிப்போடு ஏற்றுக்கொண்ட சூரியகுமார் யாதவ் இவ்வளவுதானா என்பது போல இரண்டு பத்திரிகையாளர் மட்டும் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து, தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.