தலைக்கே இந்த நிலைமையா.!.. தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.. காரணம் இதுதான்.!

0
1354

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வந்த புச்சி பாபு கிரிக்கெட் போட்டிகள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் நடைபெற இருக்கிறது. இதற்கான கோப்பை அறிமுக விழா மற்றும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலேயே மிகவும் பழமையான கிரிக்கெட் போட்டி புச்சி பாபு கிரிக்கெட் போட்டியாகும் . இந்த கிரிக்கெட் போட்டி தொடரானது 1909 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது . நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியானது தென்னக கிரிக்கெட்டின் தந்தை என்று அழைக்கப்படும் புச்சி பாபுவை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வந்தது .

- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டின் போது தமிழ்நாடு பிரிமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டதால் இந்தப் போட்டிகள் நடத்துவதற்கான கால இடைவெளி கிடைக்கவில்லை. இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்தப் போட்டி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு பிரிமியர் லீக் முடிந்த பிறகு ரஞ்சி தொடருக்கு முன்பாக தமிழக அணியை தயார் செய்யும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இந்தப் போட்டிகள் தற்போது நான்கு நாட்களைக் கொண்டதாக நடைபெற இருக்கிறது. 12 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. முதல்முறையாக இந்த போட்டிகள் அனைத்தும் சென்னைக்கு வெளியே நடைபெற இருக்கிறது. இந்த வருட புச்சி பாபு கிரிக்கெட் போட்டிகள் கோயம்புத்தூர் சேலம் திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .

சமீப காலமாக ரஞ்சி தொடரில் தமிழக அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களது திறமையை கூர்த்தீட்டும் வகையில் இந்தப் போட்டிகளை வேகப்பந்து வீழ்ச்சிக்கு சாதகமான கிரீன் டாப் ஆடுகளங்கள் அமைத்து நடத்த இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பழனி தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக இரண்டு அணிகள் களம் இறக்கப்பட இருக்கின்றன . மேலும் கேரளாவில் இருந்து ஒரு அணியும் உரையாட இருக்கிறது. இதுபோக மீதமுள்ள ஒன்பது அணிகளும் வட மாநிலங்களில் இருந்து வந்து விளையாட உள்ளன. இந்த போட்டிகளில் ஜார்க்கண்ட் அணியையும் சேர்த்துக் கொள்ளும்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பழனி தெரிவித்துள்ளார் . பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த கோரிக்கைகளை ஏற்று எட்டு அணிகளை கொண்ட போட்டிகளை தற்போது பன்னிரண்டு அணிகளாக உயர்த்தி இருக்கிறோம். இதன் காரணமாக மேலும் ஒரு அணியை எங்களால் சேர்த்துக் கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார். நிறைய மாநிலங்களில் இருந்து எங்களுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அணிகளை பரிசீலிப்பதில் சிக்கல் நீடிப்பதால் ஜார்கண்ட் அணியை இந்த முறை சேர்த்துக் கொள்ள முடியவில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்தப் போட்டிகளுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரெண்டரை கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் ரன்னர் பட்டம் வெல்லும் மணிக்கு இரண்டு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது .