2007 முதல் உலக கோப்பையில் நடந்து வரும் ஆச்சரியம்.. அப்ப இந்தியாவுக்கு கோப்பை இல்லையா?.. விசித்திர கணக்கு!

0
527
ICT

இந்த முறை முழுமையாக இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடக்க இருப்பது இந்திய அணிக்கு மிக சாதகமான விஷயம் என்று பார்க்கப்படுகிறது.

இதனால் இந்திய அணி உள்நாட்டு சூழ்நிலைகளில் மிகச் சிறப்பாக செயல்படும், மேலும் விளையாடும் எல்லா மைதானங்கள் பற்றியும் இந்தியாவுக்கு மிக நன்றாக தெரியும், எனவே இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான முதலிடத்தில் இருக்கக்கூடிய அணி என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது ஒன்பது லீக் ஆட்டங்களை 9 மைதானங்களுக்கு சென்று விளையாடுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக கிலோ மீட்டர் பயணிக்கும் அணியாக தொடரை நடத்தும் இந்திய அணியை இருக்கிறது.

இந்த வகையில் பாகிஸ்தான் அணி மிகவும் வசதியான ஒரு சூழ்நிலையில் அமைந்திருக்கிறது. ஹைதராபாத் வந்த பாகிஸ்தானை இரண்டு பயிற்சி போட்டிகளை அங்கு விளையாடுவதோடு, இரண்டு லீக் போட்டிகளையும் விளையாடுகிறது. மேலும் இரண்டு மைதானங்களில் தலா இரண்டு போட்டிகளை விளையாடுகிறது. இது பல வகைகளில் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இருக்கும்.

இப்படி இருந்தாலும் உள்நாட்டு சாதகம் இந்திய அணிக்கு இருக்கின்றது என்பதாலும், கடந்த மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளை தொடரை நடத்திய இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளை கைப்பற்றி இருக்கிறது என்பதால், இந்திய அணி மீதான நம்பிக்கை மிக அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் கடந்த நான்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் நடந்துள்ள ஒரு சம்பவத்தின் புள்ளிவிபரம் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. அந்த நான்கு உலகக்கோப்பைகளிலும் முதல் சதத்தை எந்த அணி அடித்ததோ, அந்த அணியே உலகக் கோப்பையை வென்று இருக்கிறது.

2007 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங், 2011 ஆம் ஆண்டு வீரேந்திர சேவாக், 2015 ஆம் ஆண்டு ஆரோன் பின்ச் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜோ ரூட் முதல் சதத்தை அடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடப்பு உலக கோப்பையில் முதல் சதத்தை நியூசிலாந்து அணியின் கான்வே அடித்திருக்கிறார். இந்த ஆச்சரிய புள்ளிவிபரத்தின்படி நியூசிலாந்துக்கு இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று பொறுத்து பார்க்க வேண்டும்!