ஆஸ்திரேலியா இந்திய தொடரில் நட்சத்திர வீரர் திடீர் விலகல் … உலகக்கோப்பையில் பங்கேற்பது சந்தேகமா?

0
330

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை இந்திய அணி வென்ற நிலையில் முதல் டி20 போட்டியை வெஸ்ட் இண்டீஸ் வென்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணியும் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்புவதோடு இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் .

- Advertisement -

இந்தத் தொடரை அடுத்து ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை போன்ற முக்கிய போட்டிகள் நடக்க இருப்பதால் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு அயர்லாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. அயர்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்த சிறிது நாட்களிலேயே இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக செப்டம்பர் இறுதியில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் உலகக்கோப்பை அணியில் இடம் பெறும் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஆசியக் கோப்பை போட்டி மற்றும் இந்த ஒரு நாள் போட்டி தொடர் இந்தியா உலகக்கோப்பைக்கு ஆயத்தமாவதற்கு சிறந்த பயிற்சி களமாக அமையும் .

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா ஒரு நாள் மட்டும் டி20 அணிகளை அதன் கிரிக்கெட் வாரியம் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது . இதில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ள போட்டிகளில் பங்கேற்பதில் சந்தேகம் உள்ளதாக ஆஸ்திரேலியா அணியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ் டெஸ்ட் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் போது அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்து உடனே டெஸ்ட் போட்டி முழுவதையும் விளையாடினார். இந்த காயம் காரணமாக அவருக்கு பந்து வீசுவதில் எந்தவித சிரமமும் இல்லை என்றாலும் பேட்டிங்கின் போது அவருக்கு வலி இருந்ததை நாம் காண முடிந்தது. மேலும் அவருக்கு சிறிய அளவிலான முடிவு ஏற்பட்டிருக்கலாம் என ஆஸ்திரேலியா அணியின் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மருத்துவ அறிக்கை வந்த பிறகு அவர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் தெரியவரும் .

இந்த மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலியா அங்கு மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரிலும் இதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற இருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரிலும் பேட் கம்மின்ஸ் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு சுற்று பயணங்களின் போதும் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஸ் கேப்டனாக செயல்படுவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்ட பின்னரே இது குறித்து உறுதியான தகவல்கள் தெரியவரும்.