நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட இருக்கும் வெள்ளைப் பந்து தொடர்களுக்கான இலங்கை அணிகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது.நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட இருக்கும் வெள்ளைப் பந்து தொடர்களுக்கான இலங்கை அணிகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான முறையில் செயல்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சரித் அசலங்கா தலைமையில் இலங்கை அணி புதிய உத்வேகம் பெற்று சிறப்பாக விளையாடி கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தங்களது சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கின்ற காரணத்தினால் இலங்கை அணி அதை நோக்கி இப்போது இருந்து தங்களது திட்டத்தை அமைத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இலங்கை வெள்ளை பந்து அணிகளின் முன்னாள் கேப்டன் டசன் சனகா தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நியூசிலாந்துக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களிலும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் அடிக்கடி காயத்தில் சிக்கும் வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்ர சமீராவுக்கும் இடம் கொடுக்கப்படவில்லை.
தற்போது இலங்கை அணி புதிய கேப்டன் சரித் அசலங்கா மற்றும் புதிய பயிற்சியாளர் தனது ஜெயசூர்யா ஆகியோரின் தலைமையின் கீழ் நல்ல மனநிலையில் தைரியமாக விளையாடி சிறப்பான வெற்றிகளை பெற ஆரம்பித்திருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நவம்பர் 9ம் தேதி முதல் வெள்ளைப் பந்து தொடர் துவங்குகிறது.
இலங்கை ஒருநாள் அணி : சரித் அசலங்க (கே), அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி தீக்ஷன, ஜெஃப்ரி தீக்ஷனன், மதுஷங்க மற்றும் மொஹமட் ஷிராஸ்.
இதையும் படிங்க : முதல் டி20.. அதே மைதானம்.. என் குரு யுவராஜ் மாதிரி.. ஒரு ஓவரில் 6 சிக்ஸ் அடிப்பேன் – அபிஷேக் ஷர்மா பேச்சு
இலங்கை டி20 அணி : சரித் அசலங்கா (கே) பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரமசிங்க, நுவன் துஷாரா, மதிஷா பத்திரனா, பினூரா பெர்னாண்டோ மற்றும் அசிதா பெர்னாண்டோ.