முதல் டி20.. அதே மைதானம்.. என் குரு யுவராஜ் மாதிரி.. ஒரு ஓவரில் 6 சிக்ஸ் அடிப்பேன் – அபிஷேக் ஷர்மா பேச்சு

0
801
Abhishek

தன்னுடைய மென்டர் யுவராஜ் சிங்கை பெருமைப்படுத்தும் விதமாக தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தான் விளையாடுவேன் என அபிஷேக் சர்மா கூறியிருக்கிறார்.

தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்கா சென்று இருக்கிறது. இதன் முதல் டி20 போட்டி டர்பன் மைதானத்தில் நாளை மறுநாள் நவம்பர் 8ஆம் தேதி நடக்க இருக்கிறது.

- Advertisement -

மறக்க முடியாத வரலாறு

ஐசிசி முதன்முறையாக டி20 கிரிக்கெட் வடிவத்திற்கான முதல் உலகக் கோப்பையை 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடத்தியது. 2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி பங்களாதேஷ் அணியிடம் தோற்று முதல் சுற்று உடன் வெளியேறி வந்திருந்தது.

இப்படியான நேரத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை அதே ஆண்டு வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின்ஏமாற்றத்தை துடைத்து பரிசு கொடுத்தது. இந்தத் தொடரில் யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் அடித்திருந்தார். தற்போது இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இதே மைதானத்தில் நடக்க இருக்கிறது.

- Advertisement -

என் குருநாதரை பெருமைப்படுத்துவேன்

இதுகுறித்து அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது “நான் இங்கு முதல் முறையாக வந்திருக்கிறேன். ஆனால் இந்த மைதானத்தில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் சிக்ஸர்கள் அடித்ததில் நான் ஈர்க்கப்பட்டேன். நான் அந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் ஒவ்வொரு சிக்ஸரையும் எங்கெங்கு அடித்தார் என்று நாங்கள் பார்த்து விவாதிக்கிறோம். அவர் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி அந்த ஆறு சிக்ஸர்களையும் அடித்திருந்தார்”

“அந்த போட்டியை எங்கள் தெருவில் எங்கள் வீட்டில் நான் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்திய அணி வெற்றி பெற்றதும் எங்கள் காலனி மொத்தமும் வீதிக்கு வந்து அதை கொண்டாடினோம். தற்போது நானே இங்கு வருவேன் என்று நினைக்கவில்லை. எனவே நான் சிறப்பாக விளையாட விரும்புகிறேன்”

இதையும் படிங்க : ஆஸியிடம் தோற்றாலும்.. இந்திய அணி WTC பைனல் போவதற்கான வாய்ப்புகள்.. என்ன நடக்க வேண்டும்? – முழு அலசல்

“யுவராஜ் சிங் என்னுடைய ஆட்டத்தை பார்ப்பார். இது என்னுடைய கனவு நனவாகும் தருணம்.ஏனென்றால் அவர் இங்கு விளையாடுவதை பார்த்து தான் நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கின்ற உத்வேகத்தை பெற்றேன். அவர் செய்ததை செய்ய என்னால் முடிந்தவரை முயற்சி செய்து அவரை பெருமைப்படுத்தும் விதமாக நான் நிச்சயம் விளையாடுவேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -