தென்னாப்பிரிக்கர்கள் வந்துதான் டீமை சரி செய்யணும் – ஹைதராபாத் கேப்டன் வேதனை!

0
230
Srh vs Rr

ஐபிஎல் 16ஆவது சீசனின் நான்காவது போட்டி ஹைதராபாத் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது!

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச ஹைதராபாத் கேப்டன் புவனேஸ்வர் குமார் முடிவு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் ஜெய்ஸ்வால் துவக்கம் தர களமிறங்கினார்கள்.

- Advertisement -

இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்கள். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 203 ரன்கள் குவித்தது.

அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே இரண்டு விக்கட்டுகளை அடித்து போல்ட் அதிர்ச்சி துவக்கத்தை தந்தார். இதற்கு அடுத்து அந்த அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை. முடிவில் 20 ஓவர் களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சாகல் நான்கு விக்கெட்டுகளை 17 ரன்களுக்கு வீழ்த்தினார்.

தோல்விக்கு பின் பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார்
” நாங்கள் இன்னும் சில விஷயங்களில் உழைத்து முன்னேற வேண்டும். எங்களுடைய கடைசி ஐந்து ஆறு ஓவர்கள் மற்றும் உம்ரான் மாலிக் கடைசி நாக் மிகவும் நன்றாக இருந்தது அவை நேர்மறையானவை. இங்கு கொஞ்சம் மெதுவாக பந்து வீசுபவர்களுக்கு ஏதாவது பயன் கிடைக்கிறது. இது எங்களுக்கு இந்த சீசனின் முதல் போட்டி நாங்கள் இன்னும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கிறது!” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” தென் ஆப்பிரிக்கர்கள் அவர்களது ஒரு நாள் தொடரை முடித்துவிட்டு திரும்பி வருகிறார்கள். எங்களது கேப்டனும் திரும்பி வருகிறார். இதற்குப் பிறகு நிலைமைகள் சரியாகும். நாங்கள் சிறந்த பேட்டிங் யூனிட்டாக அப்பொழுது இருப்போம். நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நாங்கள் திரும்பி வருவோம் என்று எதிர்பார்க்கிறேன். இது ஒரு நல்ல ட்ராக். ஆடுகளங்கள் எப்படி வேண்டுமானாலும் தயார் செய்யப்படலாம் ஆனால் நாம் அதில் விளையாடிதான் ஆக வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!

வெற்றிக்குப் பிறகு பேசிய சஞ்சு சாம்சன் கூறும்பொழுது ” இந்த சீசனை எப்படி தொடங்குவோம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பட்லர் மற்றும் ஜெயஸ்வால் போன்ற பேட்டர்களை வைத்திருப்பதால் நாங்கள் பவர் பிளேவில் சாதனைகளை செய்யலாம். நாங்கள் நிச்சயமாக நல்ல ஒரு அணி. ஆனால் பலமும் இருக்கும் பலவீனங்களும் இருக்கத்தான் செய்யும். நாங்கள் விளையாடும் போது எங்களது பலவீனங்களை கண்டுபிடித்து கொள்ளுங்கள்!” என்று நகைச்சுவையாக கூறி முடித்தார்!