மூன்று நாடுகள் பங்கேற்று விளையாடும் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க டி20 அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு டிவால்ட் பிரிவிஸ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த மாதம் ஜூலை 11ஆம் தேதி முதல் ஜிம்பாவேவில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிக் கொள்ளும் டி20 தொடர் துவங்க இருக்கிறது. தற்போது இதற்கான இரண்டாம் நிலை தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவால் வந்த வாய்ப்பு
தென் ஆப்பிரிக்க இளம் வீரர் டிவால்ட் பிரிவிஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடியிருந்தார். அவரிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான செயல்பாடு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த பின் ஆப்ரிக்க நிர்வாகம் அவரை இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கி வைத்திருந்தது.
இந்த நிலையில் இந்த முறை சிஎஸ்கே அணி மிகவும் கடினமாக இருந்த நிலையில் டிவால்ட் பிரிவிஸ் எட்டு போட்டிகளில் விளையாடி 250 ரன்கள் எடுத்தார். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணிக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு இங்கிலாந்து விட்டாலிட்டி டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது தென் ஆப்பிரிக்கா டி20 அணியிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா டி20 அணி
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம் முதல் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நன்ரே பர்கர் மற்றும் லுவான்-ட்ரே பிரட்டோரியஸ் போன்ற இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தென் ஆப்பிரிக்க அணியை வாண்டர் டேசன் வழி நடத்துகிறார்.
இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. இங்கி அணியில் இணையும் ஆஸியை மிரட்டிய வீரர்.. பும்ரா ஆடுவாரா? – வெளியான தகவல்கள்
டி20 தென் ஆப்ரிக்கா அணி : ராஸ்ஸி வான் டெர் டுசென் (கே), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, க்வேனா மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி என்கிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ் மற்றும் ஆண்டிலே சிமிலென்.






