இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்க, மேலும் ஒரு பின்னடைவாக இங்கிலாந்து அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவர் திரும்பி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அடுத்த மாதம் இரண்டாம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு இங்கிலாந்துக்கு நட்சத்திர திரும்ப இருக்கிறார்.
இந்திய அணிக்கு முதல் பின்னடைவு
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பும் ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தெளிவாக முன்பே கூறப்பட்டு விட்டது. ஆனால் அந்த மூன்று போட்டிகள் எது என்பது மட்டுமே இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு அதிகபட்ச ஓவர்கள் வீச வேண்டிய சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக அவருக்கு உடனடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்புவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது இந்திய அணிக்கு முதல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இரண்டாவது பின்னடைவு
இந்திய அணிக்கு பும்ரா விளையாடுவது சந்தேகம் என்கின்ற நிலையில், இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் திரும்ப இருக்கிறார் என இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 15 பேர் கொண்ட அணியில் இன்று அவருடைய பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : 2வது நாள்.. பங்களாதேஷ் அணிக்கு இலங்கை பாடம்.. 2 சதங்களுக்கு பதிலடி.. மீண்டும் நடந்த பரிதாபம்
இங்கிலாந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து விளையாடி வருகிறது. இப்படியான ஆடுகளங்களில் வேகத்தை வைத்து மட்டும்தான் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்ற முடியும். இவர்களில் அதிவேக பந்துவீச்சாளர்கள் மார்க் வுட் மற்றும் கஸ் அட்கின்ஸன் இருவரும் இல்லாத நிலையில், அவர்களை விட அதிவேகமாக பேசக்கூடிய ஆர்ச்சர் கிடைத்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பலமாகவும் இந்திய அணிக்கு பின்னடைவாகவும் மாறி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியையே இங்கிலாந்தில் அலற விட்டவர் ஆச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.






