பிசிசிஐ போட்ட ஸ்கெட்ச்.. மோதிக் கொள்ளும் ருதுராஜ் கில்.. டி20 உலககோப்பை 2024!

0
2948
BCCI

அடுத்த ஆண்டு 2024 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் 20 அணிகள் தற்பொழுதே தெரிய வந்திருப்பதால், எல்லா அணிகளும் உலகக் கோப்பையை நோக்கி தங்கள் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன.

இந்த நிலையில் அடுத்த வருடம் ஜூலை மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு இடையில் இந்திய அணிக்கு மூன்றே மூன்று சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஜனவரியில் விளையாடுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில் போதிய பயிற்சி இருக்காது என்கின்ற நிலையில், பிசிசிஐ டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக வரும் ஐபிஎல் தொடரை பயிற்சிக் களமாக சிந்திக்கிறது. இது எந்த அளவிற்கு பயன் கொடுக்கும்? என்று முடிவில்தான் தெரியும்.

தற்பொழுது பிசிசிஐ தரப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக வருவதற்கு முழு சம்மதம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, டி20 உலகக்கோப்பைக்கு இந்திய கேப்டனாக திரும்புவார் என்பது ஏறக்குறைய முடிவாக இருக்கிறது.

இதன் காரணமாக துவக்க இடத்தில் ரோகித் சர்மா உடன் ஜெய்ஷ்வால் இடதுகை வீரர் என்பதால் கட்டாயம் இடம் பெறுவார் என்பதும் உறுதியான விஷயமாகவே இருக்கிறது. எனவே டி20 உலகக் கோப்பை பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் என்று முடிவாகிவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக, ஒருவேளை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இசான் கிஷான் விக்கெட் கீப்பராக இடம் பிடித்தால், கூடுதல் பொறுப்பாக மாற்றுத் துவக்க ஆட்டக்காரர் இடத்தையும் வகிப்பார். எனவே மேற்கொண்டு துவக்க ஆட்டக்காரர்களுக்கு அணியில் இடம் கிடையாது.

ஆனால் இஷான் கிஷான் இடம் பெறவில்லை என்றால், மூன்றாவது துவக்க ஆட்டக்காரர்களுக்கான இடத்திற்கு ருதுராஜ் மற்றும் கில் இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் யாரை தேர்வு செய்யலாம்? என்பதற்கு, பிசிசிஐ ஒரு திட்டம் வகுத்திருக்கிறது.

அந்தத் திட்டம் என்னவென்றால், வருகின்ற ஐபிஎல் தொடரில் ருதுராஜ் மற்றும் கில் இருவரில் யார் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கே டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு தரலாம் என்று முடிவு செய்ததாகத் தெரிகிறது. எனவே வருகின்ற ஐபிஎல் தொடரில் ருதுராஜ் மற்றும் கில்லுக்கு இடையே ஒரு தனி ரேஸ் நடப்பது உறுதி!