“இந்திய அணியில் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.. இப்போதைக்கு இதை செய்ய வேண்டும்!” – ராகுல் டிராவிட் வெளிப்படையான பேச்சு!

0
1433
Dravid

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பைக்கு முன்பாக, அதற்கு தயாராகும் விதமாக, பங்கேற்கும் 10 அணிகளும் மோதிக்கொண்ட சர்வதேச போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்திய அணி நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி முடித்தது.

- Advertisement -

இதற்கு முந்தைய நாளில் நியூசிலாந்து, பங்களாதேஷ் அணியும், இங்கிலாந்தின் இரண்டாம் கட்ட அணி அயர்லாந்து அணிக்கு எதிராகவும் விளையாடி முடித்திருந்தன.

இந்த நிலையில் நாளை முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரையில் இந்தியாவில் உலகக் கோப்பைக்கு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பங்கேற்கும் பத்து அணிகளுக்கும் தலா இரண்டு போட்டிகள் பயிற்சி போட்டியாக அமைகின்றன.

உலகக் கோப்பைக்கு தயாராகி உள்ள விதத்தில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால், இதுவரை வாய்ப்பு பெற்ற வீரர்களில் எல்லோருமே தங்கள் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி இருக்கிறார்கள். ஜடேஜா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரும் பேட்டிங்கில் வெளிப்படவில்லை என்பது மட்டுமே குறையாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் அணி நிலவரம் பற்றி பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “அணியின் எல்லா வீரர்களுக்கும் விளையாடும் நேரம் மிக முக்கியமானது. அவர்களால் அதைப் பெற முடிந்தது. தாங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.

பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடி தன்னுடைய 10 ஓவர்களையும் பேசியிருக்கிறார். சிராஜ் ஒரு சிறிய நிக்கிலால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவரும் திரும்பி வந்து பந்து வீசி இருக்கிறார்.

கடந்த இரண்டு ஆட்டங்களில் அஸ்வின் நன்றாகச் செயல்பட்டு இருக்கிறார். அவர் பந்து வீசிய விதத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கேஎல்.ராகுல் இரண்டு போட்டிகளில் முழுமையாக விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார். அவர் கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்களுக்குப் பிறகு சிறப்பாக வந்திருக்கிறார்.

ஸ்ரேயாஸ் அவரும் இரண்டு ஆட்டங்களில் நன்றாக விளையாடி இருக்கிறார். நாங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் எங்களுக்கு கிடைத்துள்ள முன்னேற்றத்தை அடுத்து உலக கோப்பைக்கு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்.