“மும்பையில நிலைமை கொடூரமா இருக்கு.. எங்களால எதுவும் பண்ணவே முடியல..!” – ஆட்டநாயகன் கிளாஸன் ஆச்சரியமான கருத்து!

0
2567
Klasen

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று, மும்பை வான்கடே மைதானத்தில், நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிகவும் சுவாரசியமாக நடந்து முடிந்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் அதிரடியாகக் குவித்தது. அந்த அணியின் ஹென்றி கிளாசன் 67 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியால் 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. அவர்கள் 170 ரன்களுக்கு சுருண்டு 229 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தார்கள்.

தற்பொழுது இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

மேலும் தொடர்ச்சியாக பெற்ற மூன்று தோல்விகளும் மோசமான தோல்விகள் என்கின்ற காரணத்தினால் ரன் ரேட் பெரிய அளவில் பாதிப்படைந்து இருக்கிறது. இதற்கு அடுத்து வரக்கூடிய போட்டிகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். மேலும் ரன் ரேட்டையும் இங்கிலாந்து உயர்த்த வேண்டும். இதன் காரணமாக இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு முடிந்து விட்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆட்டத்தை மாற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற ஹென்றி கிளாஸன் பேசும்பொழுது “இந்த ஆட்டம் என்னுடைய சிறந்ததை கொண்டுள்ளது. இங்கு விளையாடும் பொழுது தட்பவெப்ப நிலைகள் மிகவும் கொடூரமாக இருந்தது. இங்கிருக்கும் வெப்பம் அனைத்து ஆற்றலையும் வெளியேற்றுகிறது.

எனவே இதன் காரணமாக என்னை கடைசியில் ரன்கள் ஓட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆற்றலை சேமித்துக் கொள்ள சொல்லப்பட்டது. இங்கிலாந்தும் இதே நிலைமையில்தான் இருந்தது.

மார்க்ரம் வரும்பொழுது என்ன பேச்சு வார்த்தை இருந்ததோ அதேதான் மார்க்கோ யான்சன் வரும்பொழுதும் இருந்தது. யான்சன் வேற லெவலில் இருந்தால். அவர் என்னை தொடர்ந்து வழி நடத்தினார். அவர் இந்த விருதை பெறுவதற்கு தகுதியானவர்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக மோசமான ஒரு தோல்வியை சந்தித்தோம். ஆனால் ஒரு மோசமான தோல்வி நம்மை ஒரு மோசமான அணியாக மாற்றி விடாது. நாங்கள் சில கடினமான விவாதங்களில் ஈடுபட்டோம். பயிற்சி அமர்வுகளில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இன்று மிகச் சிறப்பான செயல்பாட்டை காட்டி இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!