2025 சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை அறிவிப்பு.. 2 பிரிவுகள்.. இந்திய அணி போட்டிகள் – மொத்த விபரங்கள்

0
1665
ICC

2025 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. மேலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாத காரணத்தினால், இந்திய அணியின் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது. ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் இறங்கி வந்திருக்கிறது.

- Advertisement -

8 அணிகள் இரண்டு பிரிவுகள்

இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் எட்டு அணிகள் அங்க வருகின்றன. அதாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் விளையாடுவதற்கு தகுதி பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பங்குபெறும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. இரண்டாவது பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இலங்கை அணி தகுதி பெறவில்லை.

- Advertisement -

இந்தியா மற்றும் மொத்த போட்டிகளின் அட்டவணை

இந்திய அணி முதல் சுற்றில் மூன்று போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் 2025 பிப்ரவரி 20ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும், பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் மதியம் 2:30 மணிக்கு துவங்குகிறது. இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடத்தப்படும். இல்லையென்றால் இந்த போட்டிகள் பாகிஸ்தானில் கராச்சி மைதானத்தில் நடத்தப்படும்.

2025 சாம்பியன்ஸ் டிராபி மொத்த அட்டவணை

பாகிஸ்தான்-நியூசிலாந்து – கராச்சி – பிப்ரவரி 19
இந்தியா-பங்களாதேஷ் – துபாய் – பிப்ரவரி 20
ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா – கராச்சி – பிப்ரவரி 21
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து – லாகூர் பிப்ரவரி 22
இந்தியா-பாகிஸ்தான் – துபாய் – பிப்ரவரி 23
பங்களாதேஷ்-நியூசிலாந்து – ராவல்பிண்டி – பிப்ரவரி 24
ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா – ராவல்பிண்டி – பிப்ரவரி 25
ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து – லாகூர் – பிப்ரவரி 26
பாகிஸ்தான்-பங்களாதேஷ் – ராவல்பிண்டி – பிப்ரவரி 27
ஆப்கானிஸ்தான்-ஆஸ்திரேலியா – லாகூர் – பிப்ரவரி 28
இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா – கராச்சி – மார்ச் 1
இந்தியா-நியூசிலாந்து – துபாய் – மார்ச் 2

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்.. பாகிஸ்தான் அணியில் சேர விரும்பாத ஷாகின் அப்ரிடி.. இந்திய அணிக்கு செக்கா?

முதல் அரையிறுதி – மார்ச் 4 – துபாய் அல்லது கராச்சி
இரண்டாவது அரையிறுதி – மார்ச் 5 – துபாய் அல்லது லாகூர்
இறுதிப்போட்டி – மார்ச் 9 – துபாய் அல்லது லாகூர்

- Advertisement -