தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்.. பாகிஸ்தான் அணியில் சேர விரும்பாத ஷாகின் அப்ரிடி.. இந்திய அணிக்கு செக்கா?

0
913
Shaheen

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் தான் இடம்பெற விரும்பவில்லை என ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஷாகின் அப்ரிடி உள்நாட்டில் நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் தொடரிலும் இடம்பெறவில்லை. இதற்கு அடுத்து அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

மிக முக்கியமான தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

தென் ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டில் ஒரு போட்டியை தென் ஆப்பிரிக்க அணி வென்றால் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அணியின் இறுதி போட்டிக்கான வாய்ப்பை பெரும் அளவில் குறைக்கும்.

இந்த நிலையில் இந்த முக்கியமான டெஸ்ட் தொடரில் தான் விளையாட விரும்பவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஷாகின் அப்ரிடி தெரிவித்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாகவே அவரை தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

விளையாட விரும்பாத காரணம் என்ன?

தென் ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி, அந்த அணியை ஒயிட் வாஷ் பாகிஸ்தான அணி செய்வதற்கு முக்கியமான காரணமாக பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி இருந்தார். மேற்கொண்டு சொந்த நாட்டில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராக, ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து விட்டதால், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஷாகின் அப்ரிடி விரும்பவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : என்னை செலக்ட் பண்ணாததுக்கு காரணம்.. பாபர் அசாம் பிரச்சனை தான்.. தப்பா போயிடுச்சு – பகார் ஜமான் பேட்டி

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் ஷாகின் அப்ரிடி விளையாடுவது தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடியை உண்டாக்கக் கூடியதாக இருந்திருக்கும் என்றும், தற்போது அவர் இந்த தொடரில் விளையாட விரும்பாதது, இந்திய அணிக்கு வைக்கப்பட்ட ஒரு செக் ஆகவே இருக்கிறது என்றும், இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -