இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. முழு அட்டவணை வெளியீடு.. 2025 WTC தொடரின் அதிரடி ஆரம்பம்

0
353
England

இந்திய அணி அடுத்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்பொழுது வெளியிட்டு இருக்கிறது.

இந்திய அணி தற்சமயத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டிலும் அவர்களது நாட்டிலும் விளையாடிக் கொண்டு வருகிறது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இந்த இரண்டு தொடர்களும் ஆசஸ் டெஸ்ட் தொடரோடு சேர்த்து மிகவும் முக்கியமானதாக இருந்து வருகின்றன.

- Advertisement -

நான்காவது WTC தொடர்

இந்திய அணி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் வரையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளும் தற்போது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவடைந்து நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் ஆரம்பத் தொடராக இந்திய அணிக்கு இந்த இங்கிலாந்து தொடர் அமைய இருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் சுற்றுப்பயணம் 2-2 என டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆணி வேரான தொடர்

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் கோல்ட் கூறும்பொழுது “இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஒரு பெரிய நிகழ்வாகும். எங்களுடைய கோடைகால கிரிக்கெட்டின் சிறப்பம்சமாக இருக்கும். இங்கு கடைசியாக இரு அணிகளும் மோதிக் கொண்ட டெஸ்ட் தொடர் ஒரு ஆணிவேராக அமைப்பிற்கு இருந்தது. இந்த முறையும் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடர் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : எங்க பாபர் அசாம் டக் அவுட் ஆனா கூட உலகமே பேசுது.. அதுக்கு காரணமே இதுதான் – பாக் பசித் அலி பெருமிதம்

இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை:

1வது டெஸ்ட்: ஜூன் 20-24 – ஹெடிங்லி, லீட்ஸ்
2வது டெஸ்ட்: ஜூலை 2-6 – எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
3வது டெஸ்ட்: ஜூலை 10-14 – லார்ட்ஸ், லண்டன்
4வது டெஸ்ட்: ஜூலை 23-27 – எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
5வது டெஸ்ட்: ஜூலை 31-ஆகஸ்ட் 4 – கியா ஓவல், லண்டன்

- Advertisement -