2022 பஞ்சாப் அணிக்கு எதிரான அதே திவாட்டியா மேஜிக் இந்த முறையும் வொர்க் அவுட் ஆனது. பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்!

0
843
Tiwatia

பதினாறாவது ஐபிஎல் சீசனில் நான்காவது நாளாக இன்றும் பஞ்சாப் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி கடைசி ஓவருக்கு சென்று பரபரப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது!

டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஷார்ட் 36, இந்திய வீரர் ஷாருக்கான் 21 (8) மட்டுமே சிறப்பான பங்களிப்பு தர நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் மூத்த இந்திய வேகப்பந்து பேச்சாளர் மோகித் சர்மா நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் தந்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய குஜராத் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 4.4 ஓவர்களில் 48 ரன்கள் வந்தது. சகா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாய் சுதர்சன் 20 பந்துகளில் 19 ரன், கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 பந்துகளில் 8 ரன்கள், சுப்மன் கில் 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் நான்கு பந்துகளுக்கு ஆறு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. திவாட்டியா ஒரு ரன்னும் மில்லர் ஒரு ரன்னும் எடுத்தார்கள். அடுத்த இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் பின்புறமாக நகர்ந்து அபாரமாக தட்டிவிட்டு பவுண்டரி எடுத்து அணியை ஒரு பந்து மீதம் இருக்கையில் வெற்றி பெற வைத்தார் திவாட்டியா.

நான்காவது ஆட்டத்தில் விளையாடிய குஜராத் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். நான்காவது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும். கடந்த ஐபிஎல் சீசனில் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து பஞ்சாப் அணியுடன் குஜராத் அணியை திவாட்டியா வெல்ல வைத்திருந்தார். தற்பொழுதும் அதே திவாட்டியா மேஜிக் நடந்திருக்கிறது. மேலும் 12 முறை சேசிங் செய்ததில் 11 முறை குஜராத் அணி வெற்றி பெற்று இருக்கிறது!

- Advertisement -