திரும்பவும் பாகிஸ்தான் டீம் வந்தா தோற்கடிப்போம்.. 3 இல்ல 4 டிபார்ட்மெண்ட் வீக் – அமெரிக்க வீரர் அலி கான் பேட்டி

0
64
Ali

அமெரிக்க அணிக்காக விளையாடும் பாகிஸ்தானில் பிறந்த வேகப்பந்துவீச்சாளர் அலி கான் பாகிஸ்தான் அணியை மீண்டும் தங்களால் வீழ்த்த முடியும் என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிமுக அணியான அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வைத்து வென்று இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறி ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கருப்பு நாள்

இந்த குறிப்பிட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவதாக பேட்டிங் செய்த அமெரிக்க அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி சிறப்பாக அடித்து 19 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணியால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை அறிமுக அணி அமெரிக்கா வீழ்த்தியது. இந்த நிலையில் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறியது. இந்த தோல்வியை பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கருப்பு நாள் எனப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்துவோம்

இந்த நிலையில் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்க அணிக்காக விளையாடும் அலி கான் கூறும் பொழுது “நாங்கள் அழுத்தத்தில் இல்லை ஆனால் பாகிஸ்தான் அணியினர் அழுத்தத்தில் இருந்தார்கள். அவர்களைவெல்லும் திறன் எங்களுக்கு இருக்கிறது என்று நன்றாகவே தெரியும். பேட்டிங் பவுலிங் பில்டிங் என்று மூன்று துறைகளில் மட்டும் இல்லாமல் உடல் தகுதியிலும் சேர்த்து நான்கு துறைகளிலும் நாங்கள் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினோம்.

இதையும் படிங்க : ரூட் ஸ்மித் யாரும் கிடையாது.. சங்கக்ராவுக்கு அடுத்து அதுல விராட் கோலிதான் – இலங்கை மேத்யூஸ் கருத்து

நாங்கள் மீண்டும் பாகிஸ்தான் அணியை தோற்கடிக்கும் அளவுக்கு சிறந்தவர்கள். நான் பாகிஸ்தான் அணியை அவமதிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. நாங்கள் ஒரு நல்ல அணி என்று நினைக்கிறேன். பாகிஸ்தானை மட்டும் இல்லாமல், எங்களிடம் முழு பலம் வாய்ந்த அணி இருந்தால் குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும். அவர்களுக்கு எதிராக நாங்கள் மீண்டும் விளையாட்டினால் அது சிறந்த போட்டியாக அமையும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -