இந்திய கிரிக்கெட்

டை ஆன இந்தியா இலங்கை போட்டி.. சூப்பர் ஓவர் ஏன் தரவில்லை.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

இன்று இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுக்க போட்டி டை ஆனது. ஆனாலும் டி20 கிரிக்கெட் போல இந்த போட்டிக்கு சூப்பர் ஓவர் கொடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

இந்திய அணியின் இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரின் மூன்றாவது போட்டி டிரா ஆனது. இதில் வெற்றி தோல்வி கண்டறிவதற்காக போட்டி சூப்பர் போருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றது.

அதே சமயத்தில் இன்று இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர்களுக்கு 230 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இறுதியாக 10 விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. போட்டி டை ஆன நிலையில், வெற்றி தோல்வியை கண்டறிவதற்காக சூப்பர் ஓவர் தரப்படவில்லை. டி20 கிரிக்கெட் போல ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சூப்பர் ஓவர் பொதுவாக தரப்படுவதில்லை.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பல நாடுகள் பங்குபெறும் தொடரில் மட்டுமே நாக் அவுட் போட்டியில் டை ஆனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு முறை சூப்பர் ஓவர் பயன்படுத்தப்பட்டது ஞாபகத்தில் இருக்கலாம்.

மேலும் இதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி டை ஆனது. இந்த போட்டியில் வெற்றி தோல்வி கண்டறிய வேண்டிய நிலை இருந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு 230 ரன்னே போதும்னு நினைச்சேன்.. நான் அந்த ஓவரை வீச காரணமே இதுதான் – அசலங்கா பேட்டி

2020 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டிடை ஆக சூப்பர் ஓவர் பயன்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு தொடரில் சூப்பர் ஓவர் ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட ஒரே போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர்கள் பெரும்பாலும் பல நாடுகள் விளையாடும் தொடர்களில் அதுவும் நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts