இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் செட் ஆவாரா என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மாண்டி பனேசர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த அண்டர்-19 வேர்ல்ட் கப் தொடரிலும், ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்த வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி20 டீமில் இடம் பிடித்து கலக்கி வருகிறார்.
இருப்பினும் சிவப்பு பந்து கிரிக்கெட்டான டெஸ்ட் போட்டிகளில் அவரால் உடனடியாக அதே தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாண்டி பனேசர் பேசும்போது “வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவார் என்று எனக்குத் தோன்றவில்லை. தற்போதைய சூழலில் ஹேரி புரூக் மட்டுமே டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரண்டு பார்மட்டிலும் டாப் 10 வரிசையில் இருக்கிறார். சூர்யவன்ஷியிடம் டெஸ்ட் ஆட்டத்திற்கு தேவையான டெக்னிக் இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.
அதேவேளையில் மைக்கேல் கிளார்க் இதுகுறித்து பேசும்போது “விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போல அனைத்து பார்மட்டிலும் சிறப்பாக விளையாட முடியும். சூர்யவன்ஷியிடம் அதற்கான டேலண்ட் இருக்கிறது, ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறாரா என்பது தான் கேள்வி” என்று கூறி இருக்கிறார்.