“இந்திய அணிக்கு தேர்வாக இங்கிலாந்துதான் காரணம்!” – சாய் சுதர்சன் ஆச்சரியமான பேட்டி!

0
2311
Sai

இந்திய அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு இந்த மாதம் சுற்றுப் பயணம் செய்கிறது.

நேற்று இந்த சுற்றுப்பயணத்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மூன்று தொடர்களுக்கும் மூன்று கேப்டன்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கேஎல்.ராகுல், டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா என மூன்று கேப்டன்கள் வந்திருக்கிறார்கள்.

இந்த அணிகள் அறிவிப்பில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடதுகை துவக்க பேட்ஸ்மேன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதுதான்.

அவர் ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வந்தாலும் கூட, ஜெய்ஸ்வால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தயாரான துவக்க ஆட்டக்காரராக தற்பொழுது இருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே ஜெயஸ்வாலுக்கு டெஸ்ட் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரை வெளியில் வைத்து, புதியவரான சாய் சுதர்சனுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த நிலையில் தனக்கு கிடைத்த இந்திய அணி வாய்ப்பு பற்றி பேசி உள்ள சாய் சுதர்சன் கூறும்பொழுது “இது சிறந்த உணர்வு. நான் வார்த்தைகளை தொலைத்து விட்டேன். அதே நேரத்தில் இது ஆரம்பம். நான் மேம்படுத்த வேண்டிய பல பகுதிகள் இருக்கின்றன.

நான் இங்கிலாந்தில் கவுண்டி விளையாட ஒப்பந்தம் செய்து விளையாடினேன். இந்த போட்டிகள் அனைத்திலும் விளையாடி நான் நிறைய கற்றுக் கொண்டேன். அது எனக்கு கொடுத்த ஒரு வெளிப்பாடு என்னை நல்ல பேட்டர் ஆக உயர்த்தியது.

தற்பொழுது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடி வென்று தமிழக அணியை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றுவதே என்னுடைய முக்கிய வேலையாகும்!” என்று கூறியிருக்கிறார்!