கடைசிப் பந்து வரை பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

0
346
PBKS

ஐபிஎல் 16ஆவது சீசனின் எட்டாவது போட்டியாக பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே அசாம் மாநிலம் கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து ரசிகர்களுக்கு விருந்தாக முடிந்திருக்கிறது!

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள், மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்கள், ஜித்தேஷ் ஷர்மா 27 ரன்கள் எடுத்து தர, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அஸ்வின் நான்கு ஓவர்களுக்கு 25 ரன்கள் ஒரு விக்கெட், ஹோல்டர் நான்கு ஓவர்களுக்கு 29 ரன்கள் இரண்டு விக்கெட் என வீழ்த்தி அசத்தினார்கள்.

- Advertisement -

இதை அடுத்து ஆச்சரியமாக பட்லருக்கு பதிலாக அஸ்வின் மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக வந்தார்கள். ஜெய்ஸ்வால் 11 ரன்னிலும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினார்கள். மூன்றாவதாக வந்த ஜோஸ் பட்லர் 19 ரன்களில் வெளியேறினார். அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஒரு முனையில் விக்கட்டை விடாமல் நின்று ஆனால் சொந்த அணிக்கே பிரச்சனையை ஏற்படுத்தினார் படிக்கல். அவர் 26 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இளம்வீரர் ரியான் பராக் சூழ்நிலையை உணர்ந்து 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதை அடுத்து சிம்ரன் ஹெட்மயர் மற்றும் இம்பேக்ட் பிளேயர் துருவ் ஜுரல் இணைந்தார்கள். கடைசி 4 ஓவர்களுக்கு 69 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில். இருவரும் அதிரடியில் கடைசியில் பஞ்சாப் அணியையும் ரசிகர்களையும் மிரட்டி விட்டார்கள். குறிப்பாக இளம் வீரர் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது.

- Advertisement -

இறுதியாக ஒரு ஓவருக்கு 16 ரன்கள் என்ற நிலைக்கு ஆட்டம் வந்தது. அந்த ஓவரை ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சாம் கரன் வீசினார். மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் கொடுத்து ஹெட்மயரையும் ரன் அவுட் செய்தார். அதற்கு அடுத்த மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் விட்டுத்தர, ராஜஸ்தான் இறுதியாக 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. சிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக 18 பந்தில் 36 ரன்கள், ஆட்டம் இழக்காமல் துருவ் ஜுரல் 15 பந்தில் 32 ரன்களையும் எடுத்தார்கள்.

பஞ்சாப் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய நாதன் எல்லீஸ் நான்கு ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுத்தந்து நான்கு விக்கட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது இரண்டாவது வெற்றி. இரண்டாவது ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு இது முதல் தோல்வி.