ஜோ ரூட் பந்து வீசினாலும் ஐந்து விக்கெட் எடுக்க முடிகிறதுதான் பிரச்சனை – ஹர்பஜன்சிங் ஆடுகளம் குறித்து தாக்கு!

0
311
Harbhajan

இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி மீண்டும் வந்து சிறப்பான பதிலடியை இந்திய அணிக்கு தந்திருக்கிறது!

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று பலமான முன்னிலை பெற்று, தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைத்து சாதனை படைத்தது!

- Advertisement -

நேற்று முன்தினம் இந்தூர் மைதானத்தில் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பித்தது. இந்த டெஸ்ட் போட்டியை வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.

டாசில் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்கள் என சுருள, முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய, இரண்டாவது இன்னிங்ஸில் எளிதான இலக்கான 76 ரன்களை ஒரு விக்கெட் இழப்பிற்கு எட்டி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற் ஹர்பஜன் சிங் ” ஒரு பேட்டராக உங்களுக்கு நல்ல தற்காப்பு திறமை இருந்தால் கூட இந்த ஆடுகளத்தில் நீங்கள் தப்பிப்பது கடினம். நீங்கள் சச்சின், காலிஸ், லாரா, விராட் கோலி ஆக இருக்கலாம், நீங்கள் தொடர்ந்து ஒரு ஆறு பந்துகளை இங்கு விளையாடினால், பெயர் தெரியாத பந்துவீச்சாளர் கூட இங்கு உங்களை வீழ்த்தலாம்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நாதன் லயன் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர். இவர்கள் விக்கெட் எடுப்பது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஜோ ரூட் போன்ற ஒரு பந்துவீச்சாளர் இங்கு வந்து ஐந்து விக்கெட்டுகளை எடுப்பது தான் பிரச்சனை. டெஸ்ட் விக்கட்டுகள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கப்படுகின்றன. உங்கள் திறமைதான் உங்களுக்கு ரன்களையும் கொடுக்க வேண்டும் விக்கட்டுகளையும் கொடுக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” சரியான ஆடுகளத்தில் விளையாடும் பொழுதும் உங்களுக்கு சரியான தற்காப்பு யுத்திகள் தேவை. முன்பு விளையாடிய ராகுல் டிராவிட் நல்ல தற்காப்பு யுக்தியோடு விளையாடவில்லை என்று அர்த்தம் கிடையாது. அவர் நாள் முழுக்க விளையாடினார், கடினமான உழைப்பை செலுத்தினார். அதற்குப் பிறகு ஒரு சதம் அடித்தார். அதே ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தி, முதல் செஷனின் போது சதம் அடித்து வீரேந்திர சேவாக் நாள் முழுவதும் ஓய்வெடுப்பார்!” என்று கூறியுள்ளார்!