“பிட்ச் இப்படித்தான் இருந்தது.. அதனால நான் வேற மாதிரி பவுலிங்க மாத்திக்கிட்டேன்!” – ஜடேஜா தந்த இன்ட்ரஸ்டிங் இன்ஃபர்மேஷன்!

0
142
Jadeja

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று தொடரை நடத்தும் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா புனே மைதானத்தில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் புதிய கேப்டன் நஜிபுல் சாந்தோ தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அவரது முடிவுக்கு நியாயம் சேர்க்கும் விதமாக பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் கொண்டு வந்தார்கள்.

இதற்கு அடுத்து துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தட்டையான ஆடுகளத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சு செயல்பாட்டை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணியை கட்டி போட்டார்கள்.

அதற்கு மேல் பங்களாதேஷ் அணிக்கு முஸ்பிக்யூர் ரஹீம் 36, மகமதுல்லா 48 மட்டுமே குறிப்பிட தகுந்த ரன்கள் எடுத்தார்கள். மற்ற யாரும் சரியான ரன் பங்களிப்பை பங்களாதேஷ் அணிக்கு தரவில்லை. 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு பங்களாதேஷ் அணி 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஆடுகளத்தில் 350 ரன்கள் என்பது சாதாரணமானது.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் பந்துவீச வந்த ரவீந்திர ஜடேஜா, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் கேப்டன் நஜிபுல் சாந்தோ மற்றும் அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் இருவரையும் வெளியேற்றினார். மேலும் 10 ஓவர்கள் பந்து வீசி 37 ரன்கள் மட்டுமே தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டத்தின் முதல் பகுதி முடிவுக்கு பின் பேசிய ரவீந்திர ஜடேஜா “இது நல்ல விக்கெட். இதில் எந்தத் திருப்பமும் வந்து வீச்சில் கிடைக்கவில்லை. எனவே இங்கு பந்துவீச்சை எளிமையாக வைத்திருப்பது அவசியம். அப்படி செய்தால் எங்களால் எளிமையாக சேஸ் செய்ய முடியும் ரன் கிடைக்கும்.

அந்த கேட்ச் பிடித்த பிறகு நான் செய்த செலிப்ரேஷன் எங்கள் அணியின் ஃபீலிங் பயிற்சியாளரை பார்த்துதான். ஏனென்றால் எங்கள் அணியில் அன்றைய நாளில் யார் சிறப்பாக பீல்டிங் செய்கிறார்களோ அவர்களுக்கு மெடல் தரப்படும். எனவே நான் விளையாட்டாக எனக்கு தர வேண்டும் என்று சைகை செய்தேன்.

இந்த ஆடுகளத்தில் பந்தை ஸ்டெம்பை விட்டு வேறு எங்கும் வீசக்கூடாது. தொடர்ந்து லைனை மிக இறுக்கமாக வைத்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் எந்த மாதிரியான பீல்டிங் வைத்திருக்கிறிர்களோ அதற்கேற்றவாறு வீசவேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!