“ரோகித் பெரிய தப்பு பண்ணார்.. இதுதான் பின்னடைவா போச்சு!” – சேவாக் அதிரடி குற்றச்சாட்டு!

0
34680
Rohit

நேற்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக பவுண்டரி சிக்ஸர்கள் குவித்தார். இதனால் ரன்கள் வேகமாக வந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மேக்ஸ்வெல் பவர் பிளேவின் இறுதி மற்றும் பத்தாவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் எளிதாக ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரியை ரோஹித் சர்மா அடித்தார்.

அத்தோடு அந்த ஓவரை விடாமல் அதற்கு அடுத்த பந்தே இறங்கி வந்து அடிக்க முயல, அந்தப் பந்து எட்ஜ் எடுத்து காற்றில் பறந்து செல்ல, அதை ஓடிச் சென்று அபாரமான முறையில் டிராவீஸ் ஹெட் பிடித்தார்.

இந்த இடத்தில் இருந்துதான் இந்தியா அணிக்கு அப்படியே ஆட்டம் மாறியது. அதற்கு அடுத்து வந்த ஸ்ரேயா 11 வது ஓவரில் ஆட்டம் இழந்தார். மேற்கொண்டு இணைந்த கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவராலும் பௌண்டரியை அடிக்கவே முடியவில்லை.

- Advertisement -

ரசிகர்கள் பலரும் கேப்டன் ரோஹித் சர்மா அந்த இடத்தில் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். தற்பொழுது இதே கருத்தை ஷேவாக்கும் பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “அவர் ஏமாற்றம் அடையலாம் இல்லை ஏமாறாமல் இருக்கலாம் ஆனால் அணி நிர்வாகம் நிச்சயம் ஏமாற்றமடைந்திருக்கும். அவர் ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரி அடித்த பிறகு அந்த நேரத்தில் அப்படி ஒரு ஷாட் விளையாடி இருக்கக் கூடாது என்று பயிற்சியாளர்கள் அவரிடம் கூறுவார்கள்.

ஆனால் ரோகித் பவர் பிளேவின் மேக்ஸ்வெல் கடைசி ஓவரை சுலபமாக விட்டு விட விரும்பவில்லை. அவரை தொடர்ச்சியாக தாக்க அவர் நினைத்தார். ஆனால் அது ஒரு மோசமான ஷாட். மீண்டும் ஒரு வாய்ப்பு அப்படி கிடைக்கும் என்றால் அப்படி நடக்காது. சூழ்நிலைகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.

ஆனால் ரோகித் ஆட்டம் இழந்ததும் அந்த விக்கெட் வேறு மாதிரியான விக்கெட்டாக தெரிந்தது. யாராலும் அங்கு ஷாட் அடிக்க முடியவில்லை. மேலும் பேட்டர்களால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் முடியவில்லை!” என்று கூறியிருக்கிறார்!