“இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இவங்களுக்குள்ள மட்டும்தான் போட்டியே!” – ரவி சாஸ்திரி வெளிப்படையான பேச்சு!

0
245
Ravi

நடப்பு உலகக்கோப்பையில் மார்க்யூ போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்று மதியம் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது!

இதற்கான ஏற்பாட்டில் பாதுகாப்புகள் மிகவும் பலப்படுத்தப்பட்டு மேலும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் மதியம் 12:00 மணி அளவில் துவங்க இருக்கிறது. மேலும் பல இந்திய பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

- Advertisement -

அணி வீரர்களை பொறுத்தவரை இரண்டு அணியை சேர்ந்தவர்களுமே தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சில தனிப்பயிற்சிகளும் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளம் வீரர்கள் நேற்று முன்தினம் முதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். நேற்று அவர் மைதானத்தில் சிறு சிறு உடற்பயிற்சிகளிலும் அணியுடன் சேர்ந்து ஈடுபட்டார். அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு 99 சதவீதம் இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.

மேலும் நடைபெறும் போட்டிக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக ரசிகர்களிடம் ஷாகின் ஷா அப்ரிடி “நான் ஐந்து விக்கெட்டுகள் எடுக்காமல் செல்பி எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்று நகைச்சுவையாக கூறி அது சமூக வலைதளங்களில் பெரிய செய்தியாக மாறியிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்த இரு அணிகளின் மோதலில் எந்த புள்ளி முக்கியமானதாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

“இந்த போட்டியில் இந்திய தொடக்க வீரர்களுக்கு எதிராக ஷாகின் ஷா அப்ரிடி செயல்பாடு தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்தப் போட்டி சோதனையாக இருக்கும். மிகவும் சவாலாகவும் இருக்கும். யார் வென்றாலும் எளிதில் அது நடக்கக் கூடிய ஒன்றாக இருக்காது. போட்டி நீண்ட தூரம் செல்லும்.

இந்திய தரப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். இவர்களில் ஒருவர் சதம் அடித்தால் 300 முதல் 320 ரன்களை இந்திய அணி கொண்டு வரும். இந்த ரன் கட்டாயம் தேவை என்றும் நான் கூறுவேன்!” என்று கூறியிருக்கிறார்!