“இந்தியா அடிச்ச ஒரே அடி.. அது நடந்த பின்னாடி..!” – பாகிஸ்தான் பவுலிங் கோச் மோர்னே மோர்கல் வேதனை!

0
3794
Morkel

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை காலத்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எழுச்சி பெரிய அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக நடப்பு ஆசியக் கோப்பையில், கோப்பையை வெல்ல அவர்களுக்கு அதிக வாய்ப்பு என்று பலரால் கணிக்கப்பட்டது!

இந்தக் கணிப்புகளுக்கு ஏற்ற வகையில் அவர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய முதல் சுற்றில் முதல் போட்டியில் அற்புதமான செயல்பாட்டை பந்துவீச்சில் காட்டினார்கள். மிகக் குறிப்பாக அவர்களுடைய வேகப்பந்துவீச்சு உலகத் தரத்தில் இருந்தது.

- Advertisement -

இதுவெல்லாம் அந்த ஒரு போட்டி வரையில்தான். இதற்கு அடுத்து இந்திய அணி உடன் பாகிஸ்தான் இரண்டாவது சுற்றில் விளையாடிய போட்டியில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சை முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி விட்டார்கள்.

இது மட்டும் இல்லாமல் திரும்பி பந்துவீச்சில் வந்த இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்கள். அந்த ஒரு வெற்றி இரு மடங்கு நம்பிக்கையை இந்திய அணிக்கு கொடுக்க, இரு மடங்கு நம்பிக்கையை பாகிஸ்தான் தரப்புக்கு குறைத்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்று இலங்கை அணிக்கு எதிராக அரை இறுதிப் போட்டி போலான போட்டியில் விளையாடுகிறார்கள். இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறுகையில் ” இங்கு சுழலுக்கு ஏற்ற சூழ்நிலை இருக்கிறது. இந்த நேரத்தில் எங்கள் ஸ்பின்னர்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தேவைப்படும் நேரத்தில் அவர்கள் கைகளை உயர்த்துவார்கள். அவர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்கள். மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள். மீண்டு வருவது எப்படி? என்று அவர்களுக்கு தெரியும்.

நசீம் ஷா இல்லாதது நிச்சயம் பெரிய அடியாகும். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது துரதிஷ்டவசமானது. ஆனால் இது மற்ற வீரர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. இந்தியாவுடன் விளையாடிய பிறகு இது கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. இந்த நேரத்தில் புதிய வீரர்கள் வந்து தங்களுடைய கேரக்டரை காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவுடனான தோல்விக்கு பிறகு நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம். என்னை பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நீங்கள் எங்கே தவறு செய்தீர்கள்? என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இதில் மொத்த பெருமையும் இந்தியர்களுக்கு உண்டு. பேட்டிங்கில் அவர்கள் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்கள். உலகக் கோப்பைக்கு முன் இது எங்களுக்கு அருமையான பாடம். இதிலிருந்து நாங்கள் கற்று வளர்ந்து மீண்டு வருவோம்!” என்று கூறியிருக்கிறார்!