அந்த பழைய கை 2 பேரை கொண்டு வரனும்.. இல்லனா உலக கோப்பை இந்தியாவுக்கு கஷ்டம் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் உறுதி!

0
5835
Butt

இந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் இந்தியாவில் முதல் முறையாக முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கு முன்பாக இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணிக்கு இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங் யூனிட்டில் நான்காவது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் ஆகியவைகள் பிரச்சனைகளாக இருக்கிறது.

தற்பொழுது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரது தலைமையின் கீழான இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான பரிசோதனை முயற்சிகளை செய்து வருகிறது.

உலகக் கோப்பை மிக அருகில் இருக்கும் பொழுது இப்படியான பரிசோதனை முயற்சிகள் ஆபத்தானவைதான். ஆனால் முக்கிய வீரர்களின் காயம் இந்திய அணி நிர்வாகத்தை நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் பிரச்சினைகள் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் “சமீப காலங்களில் இந்திய வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடவில்லை. அவர்கள் பாரம்பரியமாக சுழற்பந்து வீச்சுக்கு திடமாக விளையாட கூடியவர்கள். ஆனால் அவர்களிடம் தற்பொழுது அந்தக் கட்டுப்பாட்டை காண முடியவில்லை. இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

இரண்டாவதாக ஒவ்வொரு சுற்றுப் பயணத்திலும் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கின்றன. உலக கோப்பைக்கு முன் நமக்கு நிலையான 15 பேர் கொண்ட அணி கையில் இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வீரருக்கும் என்ன மாதிரியான ரோல் என்பது தெளிவாகத் தெரிய வேண்டும். இல்லையென்றால் மிகவும் கடினம்.

நீங்கள் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து வித்தியாசமான சேர்க்கையை அணியில் விரும்பினால், நீங்கள் மொத்தமாக இந்திய ஏ அணியை அனுப்பி இப்படியான பரிசோதனை முயற்சிகளை செய்து கொள்ளலாம். உங்களுடைய பாதி வீரர்கள் அணியிலும் மீதி பாதி வீரர்கள் வெளியிலும் இருப்பது சரியானது அல்ல. உங்களின் சூரியகுமார் யாதவ் சுப்மன் கில் மற்றும் இசான் கிஷான் யாரும் புதியவர்கள் கிடையாது. அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதங்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் சதம் அடித்தவர்கள்.

ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய டெஸ்ட் அணிக்கு வந்து தனது திறமையை நிரூபித்த ரகானே தற்பொழுது இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கு நல்ல ஒரு தேர்வாக இருப்பார். மேலும் முக்கியமாக இந்திய அணிக்கு ஷிகர் தவான் தேவை. அவரைப்போல் டாப் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனை நான் இந்திய அணியில் இப்பொழுது பார்க்கவில்லை.

ஷிகர் தவான் மற்றும் கில் இருவரும் ஓபன் செய்யலாம். இல்லை ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் ஓபன் செய்யலாம். இவர்களில் யாராவது மூன்றாவதாக வர நான்காவது இடத்தை கோலிக்குத் தரலாம். இவர்களுக்கு உலகக்கோப்பையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. இதனால் ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் ராகுல், ரகானே போன்ற அழுத்தத்தை சமாளிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!