இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டன் இந்த சிஎஸ்கே வீரர்தான்; ஆனா ஒரு பிரச்சனை… பகீர் கிளப்பும் ஜாபர்!

0
789
Jaffer

தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி மூன்று வடிவத்திலும் வீரர்கள் முதற்கொண்டு கேப்டன் வரை முழு மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மேலும் 3 வடிவங்களுக்கும் தனிப்பட்ட அணிகளை உருவாக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து செயல்பட்டு வருகிறது!

தற்பொழுது ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் கேப்டனாக தொடர்ந்தாலும் கூட, டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக இனி வரவே முடியாது என்பதுதான் உண்மை. அந்தப் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்து விட்டார்கள். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

- Advertisement -

இதேபோல் இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும், இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஹர்திக் பாண்டியா முழு நேர கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் தற்பொழுது 36 வயதாகி இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு உடல் தகுதியில் சின்ன பிரச்சனைகளும் இருக்கிறது. எனவே அவர் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாட மாட்டார் என்பதும், கிரிக்கெட் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என்றால், இந்திய சிவப்பு பந்து கிரிக்கெட் யார் கேப்டன் என்கின்ற வாத விவாதங்கள் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதன்படி பெரும்பாலானவர்கள் ரிஷப் பன்ட்தான் அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்று கூறி வருகிறார்கள். ஆனால் தற்பொழுது துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள 35 வயதான ரகானேதான் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக கொண்டு வரப்படுவார் என்று, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் கூறியிருக்கிறார். மேலும் அதில் ஒரு சிக்கலும் இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வாசிம் ஜாஃபர் இது குறித்து கூறும் பொழுது ” ரகானே தனது ஆட்டத்தில் நிலைத்தன்மையை காட்ட வேண்டும். அவர் 80 முதல் 90 டெஸ்ட் போட்டிகளை இந்தியாவுக்காக விளையாடி இருந்தாலும், அவரிடம் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாததுதான் பிரச்சனையாக இருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல கேப்டன் தேவை என்பதால், அவர் இந்த சவாலை சமாளிக்க வேண்டும். ரகானே தொடர்ச்சியாக ரன்கள் எடுத்தால், பின்பு நடக்க வேண்டியவைகள் தாமாக நடக்கும்.

ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தி, அந்த தொடரையும் ரகானே வென்றார். அதற்குப் பிறகு விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும், இவருக்குதான் கேப்டன் பொறுப்பு வந்திருக்க வேண்டும். ஆனால் ரகானே பேட்டிங்கில் நிலைத்தன்மையை கொண்டு இருக்காததுதான் அவருக்கு கேப்டன் பதவி வராததற்கு காரணம்.

இருந்தாலும் அவர் ஐபிஎல் தொடரில் தன்னை புதுப்பித்துக் கொண்டார். இதன் காரணமாக அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வாய்ப்பு பெற்று அதில் தன்னை நிரூபித்தார். இந்தியத் தேர்வாளர்கள் அவரிடம் ஒரு நல்ல தலைவரையும் கண்டதால்தான் அவரை துணை கேப்டனாக கொண்டு வந்தார்கள். அவருக்கு இன்னும் கொஞ்சம் வயது இருக்கிறது. அவர் தொடர்ச்சியாக சீராக ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் எல்லாம் கடினமானதாக மாறிவிடும்!” என்று கூறியிருக்கிறார்!