தோனி சங்கக்கரா செய்யாத சாதனையை செய்த நெதர்லாந்து கேப்டன்.. அணிக்காக செய்த இன்னும் ஒரு தியாகம்!

0
621
Edwards

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் தோற்று தன்னுடைய வழக்கமான பாதைக்கு திரும்பி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

நேற்று தாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சிறிய அணிகளுக்கு ரன்னை சேஸ் செய்யும் அழுத்தத்தை கொடுக்க வேண்டியது அவசியம். இதையே இங்கிலாந்து கேப்டனும் செய்ய தவறினார்.

- Advertisement -

இந்த நிலையில் தங்களுடைய அணி நல்ல பார்ட்னர்ஷிப் பெற்றாலும் கூட மிடில் ஆர்டர்கள் இறுதிவரை நின்று விளையாடாத காரணத்தினால், நெதர்லாந்து கேப்டன் தன்னை ஏழாவது இடத்திற்கு பேட்டிங்கில் இறக்கி கொண்டார்.

அவர் எதிர்பார்த்தது போலவே தனது அணி 5 விக்கெட்டுகளை 82 ரன்களுக்கு இழந்துவிட்டது. அந்த இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அவர் ஆட்டம் இழக்காமல் 78 ரன்கள் குவித்து, நெதர்லாந்து அணி 245 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

மேலும் நெதர்லாந்த அணியின் கேப்டனான எட்வர்ட்ஸ் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக உலக கோப்பையில் 78 ரன்கள் அடித்ததின் மூலம் தோனி மற்றும் சங்கக்கரா செய்யாத ஒரு சாதனையை செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்தச் சாதனை என்னவென்றால், ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக, ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன் ஆக இது பதிவாகி இருக்கிறது.

இதற்கு முன்பாக பங்களாதேஷ் ரஹீம் 78, இங்கிலாந்து அலெக்ஸ் ஸ்டூவர்ட் 77, குசால் மெண்டிஸ் 76, பாகிஸ்தான் மொயின் கான் 63 ரன்கள் எடுத்திருந்தார்கள். நேற்று இவர்களுடைய தனிப்பட்ட சாதனையை தாண்டி, நெதர்லாந்து கேப்டன் புதிய சாதனையை படைத்திருக்கிறார்!