பும்ராவை குழந்தை பவுலர்னு சொன்ன விவகாரம்.. என்ன தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. அப்துல் ரசாக் அந்தர் பல்டி.!

0
4882

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டி தொடரில் ஆறுப் போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் விளையாட உள்ளது.

நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்தியா ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் தொடர் தோல்விகளை சந்தித்தது பாகிஸ்தான். இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். எனினும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியும் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து பேசிய கருத்து ஒன்று தற்போது சர்ச்சையாக இருக்கிறது. இது தொடர்பாக அவரும் விளக்கம் அளித்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் பேசிய அப்துல் ரசாக் பும்ராவை பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அப்ரிதியுடன் ஒப்பிட்டு பேசும் போது ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு குழந்தை பந்துவீச்சாளர் என கிண்டல் செய்து பேசி இருந்தார் அப்துல் ரசாக்.

தற்போது உலகக்கோப்பை போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா அனல் பறக்க பந்து வீசி வருகிறார். பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வாசிம் அக்ரம் மற்றும் விஸ்பா ஆகியோர் ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது உலகின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் என பாராட்டு தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் புதிய பந்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா தன்னைவிட சிறந்த பவுலர் என வெகுவாக பாராட்டி இருந்தார். இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கவுண்டர் அப்துல் ரசாக்கிடம் கேட்கப்பட்டது. தற்போது அவர் பும்ராவை குழந்தை என்று கூறியதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அப்துல் ரசாக் ” இந்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் நான் அவரை குழந்தை என்று குறிப்பிட்டிருந்தேன். என்னிடம் பேட்டி எடுத்தவர்கள் பும்ராவை வாசிம் அக்ரம் கிளன் மெக்ராத் மற்றும் அக்தர் போன்ற ஜாம்பவங்களுடன் ஒப்பிடச் சொன்னார்கள். அந்த ஜாம்பவான்களுக்கு முன்பு ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு குழந்தை. அதனால்தான் அவரை குழந்தை என குறிப்பிட்டேன்” என கூறி இருக்கிறார்

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் பாகிஸ்தான் அணிக்கு புதியதாக வரும்போது வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய ஜாம்பவான்களுக்கு முன்பு ஒரு குழந்தை தான். இது போன்ற அர்த்தத்தில் தான் நான் பும்ராவை பற்றி குறிப்பிட்டேன். மற்றபடி அவருடைய திறமையின் அடிப்படையில் இல்லை. இந்தியாவில் நீங்கள் பேசும் ஒரு விஷயம் பலவிதமாக சித்தரிக்கப்படும். நான் பேசியதை எந்த கிரிக்கெட் வீரரும் விமர்சிக்கவில்லை. அவர்களுக்கு நான் பேசியதன் உள்ள அர்த்தம் புரியும். கிரிக்கெட் வீரர்களை தவிர மற்றவர்கள் தான் இதை விமர்சித்து வருகிறார்கள்” என குறிப்பிட்டார்.

மேலும் ஜனவரி மாதத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவை ஷாஹீன் அப்ரிதியுடன் ஒப்பிட்டு பேசும்போது நான் வாசிம் அக்ரம் மற்றும் கிளன் மெக்ராத் போன்ற லெஜன்ட் வந்து வீச்சாளர்களின் பவுலிங் எதிர்த்து விளையாடி இருக்கிறேன். எனக்கு பும்ராவின் பந்துவீச்சு ஒரு குழந்தை போன்றது தான். அவருக்கு எதிராக என்னால் அட்டாக் செய்து ரன் எடுக்க முடியும் என குறிப்பிட்டு இருந்தார்.ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த உலகக்கோப்பை தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் கல் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணியுடன் போட்டியின் போது பந்துவீச்சுக்காக அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.