எவ்வாறு நடந்தது விபத்து?திக் திக் நிமிடங்களை பகிர்ந்து கொண்ட ‘ சுசில் குமார்’

0
4985
rishabh pant

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் . இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவரது கார் இன்று காலை விபத்திற்குள்ளானது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . டெல்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்லும் வழியில் ரொக்கிரி என்ற இடத்துக்கு அருகில் இவரது கார் விபத்திற்கு உள்ளானது . இந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் ரிஷப் பண்ட் ரொக்கிரியில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பண்டிற்கு முதற்கட்ட சிகிச்சைகள் முடிந்த நிலையில் அவர் உயிருக்கு எந்த ஆபத்து இல்லை என்றும் மேலும் தலை மற்றும் கால் மூட்டுகளில் நல்ல காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கிறது .

இந்நிலையில் இந்த விபத்தானது எவ்வாறு நிகழ்ந்தது ரிஷப் பண்ட் எவ்வாறு காப்பாற்றப்பட்டார் என்று விபத்தை நேரில் பார்த்த வரும் மற்றும் அவருக்கு விபத்தின் போது உதவியாருமான ஹரியானா போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த ஓட்டுநர் சுசில் குமார் என்பவர் தெரிவித்துள்ளார் .

இது பற்றி பேசி உள்ள அவர் அந்த நிமிடங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் நாங்கள் ஹரித்துவாரில் இருந்து காலை 4:30 மணிக்கு ஹரியானா நோக்கி கிளம்பி கொண்டிருந்தோம். காலை 5:30 மணி அளவில் தான் இந்த விபத்தை நேரில் பார்த்தோம் . வேகமாக வந்த கார் ஒன்று சாலையின் ஓரம் மோதி அதன் கட்டுப்பாட்டை இழந்து மோதிய வேகத்தில் அது வந்த சாலையில் இருந்து முற்றிலுமாக மாறி அது சென்ற திசைக்கு நேர் எதிர் திசையில் வந்து விழுந்தது . இந்த விபத்தை கண்டதும் நாங்கள் எங்களது பேருந்தை உடனடியாக நிறுத்தினோம் . நாங்கள் இறங்கி உதவிக்காக ஓடிய போது காரில் இருந்து நெருப்பு பொறிகள் வருவதை கண்டோம் .

இதனை அடுத்து விரைந்து சென்று நானும் எனது பேருந்து நடத்துனரும் வேகமாகச் சென்று காரின் கண்ணாடிகளை உடைத்து அதிலிருந்த பயணியை வெளியே மீட்டோம் . அப்போது அவரது முகம் முழுவதும் ரத்தத்தால் மூடி இருந்தது . அவரை வெளியே எடுத்து அவருக்கு தேவையான முதல் உதவிகளை செய்தோம் . சிறிது நேரத்திற்கு பின் நினைவிற்கு வந்த அவர் பின்னர் சுதாகரித்துக் கொண்டு பேசினார் . நான் ரிசப் பண்ட் என்று கூறினார். எனக்கு கிரிக்கெட் அவ்வளவு பரிச்சயம் இல்லை என்பதால் அவர் யார் என்று என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை . என்னுடைய நடத்துனர் தான் அவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்தார் .

பின்னர் ரிஷப் பண்ட் அவருடைய தாயாரின் செல்போன் என்னைக் கொடுத்து தகவல் தெரிவிக்க சொன்னார் . அவர்கள் தாயாரின் செல்போனை தொடர்பு கொள்ள முயற்சிக்கவும் ஆனால் எங்களுக்கு இணைப்பு கிடைக்கவில்லை . அதன் பிறகு என்னுடைய நடத்துனர் அவசர எண்ணை அழைத்தார் . அப்போது ஆம்புலன்ஸ் வந்தது . அதில் அவரை ஏற்றி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்தோம் . நல்ல வேலையாக நெருப்பு முழுவதும் பரவுவதற்கு முன்பாகவே நாங்கள் விரைவாக வாகனத்தை அடைந்து விட்டோம் அதனால் அவரைக் காப்பாற்ற முடிந்தது என்று கூறியுள்ளார் .

தற்போது முதலுதவி சிகிச்சைகளை முடித்து உத்தராகண்டின் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் அங்கே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் . அவரது உயிருக்கு எந்த ஆபத்து இல்லை என்றாலும் காயங்களின் தாக்கம் பலமாக இருப்பதால் மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .