நரேந்திர மோடி மைதானம் – சுப்மன் கில் காதல் கதை, இப்போது கல்யாணத்தில் முடிந்துவிட்டது – தன்னுடைய பாணியில் புகழ்ந்த சேவாக்!

0
390

‘நரேந்திர மோடி மைதானம் மற்றும் சுப்மன் கில் இருவரின் காதல் கதை இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது’ என்று தனக்கே உரிய பானையில் பாராட்டியுள்ளார் சேவாக்.

இந்திய அணியின் அடுத்த விராட் கோலி என்று பார்க்கப்பட்டு வரும் வீரர் சுப்மன் கில். இவர் இந்த வருடம் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் சதம் விலாசி இன்றியமையாத பல சாதனைகளை படைத்துள்ளார்.

- Advertisement -

இதன் தொடர்ச்சியாக தற்போது விளையாடி வரும் ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணைக்கு எதிரான லீப் போட்டியில் இந்த நரேந்திர மோடி மைதானத்தை தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணிக்கு அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.

இப்படி எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ள சுப்மன் கில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் டி20 சதம், இந்தியாவில் முதல் டெஸ்ட் சதம் மற்றும் முதல் ஐபிஎல் சதங்களை அடித்திருக்கிறார்.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 126 ரன்கள் அடித்து முதல்ல டி20 சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இதே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 128 ரன்கள் அடித்தார். இந்தியாவில் சுப்மன் கில் அடித்த முதல் டெஸ்ட் சதம் இதுவாகும்.

- Advertisement -

இதன் தொடர்ச்சியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இதே நரேந்திர மோடி மைதானத்தில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்துள்ளார் கில்.

இவை அனைத்தையும் ஒப்பிட்டு நரேந்திர மோடி மைதானத்திற்கும் சுப்மன் கில்லுக்கும் இருக்கும் காதல் கதை, கல்யாணத்தில் முடிந்து வருகிறது. இந்த மைத்தனத்தில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று பாராட்டினார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்.

மேலும் பேசிய அவர், “நரேந்திர மோடி மைதானத்தில் மற்ற பேட்ஸ்மேன்ட்கள் ரன்கள் அடிப்பதற்கு திணறி வரும்பொழுது சுப்மன் கில் எந்தவித சிக்கலும் இன்றி எளிதாக பவுண்டரி அடிக்கிறார். இதை ஒரு போட்டியில் மட்டும் செய்துவிடவில்லை. சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள், தற்போது ஐபிஎல் போட்டிகளில் செய்திருக்கிறார். இதிலிருந்து அவரது நேர்த்தியான பேட்டிங் மற்றும் உறுதியான டெக்னிக் தெரிகிறது.” என்றும் பாராட்டினார்.