முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி; டேவிட் மில்லரின் அதிரடி சதம் வீண்!

0
276
ICT

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது மோதி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று அசாம் மாநிலம் கவுகாத்தி நகர மைதானத்தில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அவர்கள் அணியில் சம்சி வெளியே போய் நெகிடி உள்ளே வந்திருந்தார்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்க 96 ரன் குவித்தார்கள். ரோகித் சர்மா 37 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஆட்டத்தில் மிக அதிரடியாக விளையாடிய கே எல் ராகுல் இருபத்தி எட்டு பந்தில் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

107 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த பொழுது விராட் கோலி சூரியகுமார் ஜோடி சேர்ந்தனர். இந்தப் போட்டியிலும் சூரியகுமார் வழக்கம்போல் பந்துகளை காற்றிலும் தரைவழியாகவும் எல்லைக் கோட்டை தாண்ட வைத்துக் கொண்டே இருந்தார். அதிரடி தொடர 18 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். மொத்தம் 22 பந்துகள் களத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 ரன்களை குவித்தார். விராட் கோலி சூரியகுமார் ஜோடி மொத்தம் 102 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ஒரு புறத்தில் விளையாடிய விராட் கோலியும் அதிரடியில் அசத்தினார். அவர் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 7 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது!

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கடந்த ஆட்டத்தில் தனது முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஸ்தீப் இந்த முறை தனது முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெம்பா பவுமா, ரூசோ ரன் அடிக்காமல் வெளியேறினார்கள். மார்க்ரம்மை 33 ரன்களில் அக்சர் படேல் வெளியேற்றினார்.

இதற்கு அடுத்து இணைந்த குயின்டன் டி காக், டேவிட் மில்லர் ஜோடி முதலில் பொறுத்து ஆடி, பிறகு பயங்கரமான அதிரடியில் ஈடுபட்டார்கள். அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தார்கள். இதற்குப் பிறகு டேவிட் மில்லரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 46 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் சதம் அடித்து மிரட்டினார். இன்னொரு முனையில் விளையாடிய குயின்டன் டி காக் 48 பந்துகளில் 69 ரன்களை 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அடித்தார். இந்த ஜோடி மொத்தம் 174 ரன்கள் குவித்தது. இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என கைப்பற்றியது!